/tamil-ie/media/media_files/uploads/2021/04/Alsup.jpg)
Raja Rani Alya Manasa Sanjiev Youtube Channel Trending Videos
Raja Rani Alya Manasa Sanjiev Youtube Channel Trending Videos : ராஜா-ராணி தொடரின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஃபேவரைட் ரீல் ஜோடிகள் லிஸ்டில் முதலிடத்திலிருந்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி, பின்னாளில் ரியல் ஜோடிகளாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தனர். இவர்களுக்கு ஐலா எனும் கியூட் பெண் குழந்தையும் உண்டு. ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் சீரியல் மற்றும் படங்களில் பிசியாக இருந்தாலும், தங்களுக்கென்று தனிப்பட்ட யூடியூப் சேனலையும் ஆரம்பித்திருக்கின்றனர்.
சஞ்சீவ் அண்ட் ஆல்யா என்றிருக்கும் இவர்களுடைய யூடியூப் சேனல் ஆரம்பித்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஆனால், சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் இவர்களைப் பின்பற்றுகின்றனர். இவர்களுடைய இன்ட்ரோ விடியோவே 5 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றிருக்கிறது. இரண்டாவது வீடியோ, அவர்களுடைய சொந்த தயாரிப்பில் 'காத்தாடி' என்னும் தலைப்பில் உருவான மியூசிக் ஆல்பம். இந்த வீடியோ தற்போது வரை 1.5 மில்லியன் வியூஸ்களை பெற்றிருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Als1.png)
இதனைத் தொடர்ந்து, சஞ்சீவின் தாய் மற்றும் ஐலாவின் பிறந்தநாள் பதிவுகள் 3 மூன்று வீடியோக்களாக பதிவேற்றப்பட்டு, அதுவும் மில்லியன் வியூஸ்களை பெற்றன. ஐலாவின் அறியப் புகைப்படங்கள் 1.1 மில்லியனும் ஐலாவின் பயண Vlog 1.3 மில்லியன் வியூஸ்களும் பெற்றிருக்கின்றன. குழந்தையை சுற்றித்தான் இவர்களுடைய சேனல் பெரும்பாலும் நகர்ந்துகொண்டிருக்கின்றது.
தற்போது, யூடியூப் தமிழ்நாடு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருப்பதும் சஞ்சீவ்-ஆல்யாவின் விடியோதான். சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெட்ரா அந்த வீடியோவும் ஐலாவை பற்றியதுதான். அதாவது ஜலாவிற்கு மொட்டை அடித்து விட்டார்களாம். இதுதான் கன்டென்ட். இன்னும் வருங்காலத்தில், இவர்களுடைய அட்ராசிட்டிகள் எப்படியெல்லாம் இருக்கப் போகிறதோ!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.