Advertisment

எம்டிஎச், எவரெஸ்ட் எவரெஸ்ட் மசாலாவில் பூச்சிக்கொல்லி: வீட்டில் உணவு கலப்படத்தை கண்டறிவது எப்படி?

இந்த சூழ்நிலை, உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் முக்கியத்துவத்தையும், தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க வழக்கமான சோதனையின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajasthan spice contamination

Ways to identify food adulteration at home

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சோதனைகளில் சில மாதிரிகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, ராஜஸ்தான் அரசு பிரபலமான மசாலா பிராண்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisment

ராஜஸ்தான் மாவட்டங்கள் முழுவதும் மசாலா மாதிரிகளை சேகரிக்க மாநில மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் மே 8 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு பிரச்சாரத்தைத் தொடர்ந்து இது வந்தது.

நன்கு அறியப்பட்ட பிராண்டுகளின் மாதிரிகள் உட்பட மொத்தம் 93 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. கவலையளிக்கும் வகையில், மாநில மத்திய பொது சுகாதார ஆய்வக பகுப்பாய்வில், சில மாதிரிகளில் பூச்சிக்கொல்லி மாசுபாடு மிக அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.

இந்த சூழ்நிலை, உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் முக்கியத்துவத்தையும், தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க வழக்கமான சோதனையின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

அதிகரித்து வரும் உணவுக் கலப்படத்திற்கு எதிராக ஊட்டச்சத்து நிபுணர் அபிலாஷா (Chief Clinical Nutritionist, Cloudnine Group of Hospitals, Bengaluru), வீட்டில் கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எப்படி கண்டறிவது என்பது குறித்து சில நுட்பங்களை பகிர்ந்து கொண்டார்.

பால்

தண்ணீர்

பளபளப்பான மேற்பரப்பில் ஒரு துளி பால் வைக்கவும். ஒரு தடம் கூட படியாமல் வழிந்து ஓடினால் அதில் தண்ணீர் இருக்கிறது.

டிடெர்ஜென்ட்

பாலை நன்கு குலுக்கவும். இது ஒரு அடர்த்தியான நுரையை உருவாக்கினால், அதில் சோப்பு இருக்கலாம்.

தேன்

ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளிகள் தேன் சேர்க்கவும். தூய தேன் அடியில் படியும், கலப்பட தேன் கரையும்.

உங்கள் கட்டைவிரலில் ஒரு சிறிய அளவு தேன் வைக்கவும். இது பரவினால், அது கலப்படமாக இருக்கலாம்.

மஞ்சள், மிளகாய் தூள்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை கலக்கவும். தூய மஞ்சள் தெளிவான நீரை விட்டு கீழே குடியேறும். தண்ணீர் நிறம் மாறினால், அதில் கலப்படம் இருக்கலாம்.

சிறிதளவு மிளகாய் பொடியில் தண்ணீரில் தெளிக்கவும். தூய மிளகாய் பொடி அப்படியே இருக்கும். கலப்படமாக இருந்தால் சிவப்பு நிறம் கசிந்து விடும்.

டீ, காபி

food adulteration

ஈரமான டிஷ்யூ பேப்பரில் சிறிதளவு தேயிலை பரப்பவும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு கறை தோன்றினால், அது செயற்கை நிறம் இருப்பதைக் குறிக்கிறது.

காபி பொடியை தண்ணீரில் தெளிக்கவும். தூய காபி மிதக்கும், அதேநேரம் கலப்படம் அடியில் குடியேறும்.

காய்கறிகள்

பச்சை காய்கறிகளின் மேல் தண்ணீர் அல்லது எண்ணெயில் ஊறவைத்த காட்டன் பஞ்சு கொண்டு தேய்க்கவும். பஞ்சு நிறம் மாறினால், அதில் செயற்கை சாயங்கள் இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் சில துளிகள் தண்ணீர் வைக்கவும். தண்ணீர் வைத்த இடம் பழுப்பு நிறமாக மாறினால், அது கால்சியம் கார்பைடு போன்ற செயற்கை பழுக்க வைக்கும் பொருட்கள் இருப்பதைக் குறிக்கிறது

கோதுமை, பிற தானியங்கள்

ஒரு டீஸ்பூன் கோதுமை மாவை தண்ணீரில் கரைக்கவும். சுத்தமான மாவு கீழே குடியேறும். தண்ணீர் நிறம் மாறினால் அல்லது எச்சம் இருந்தால், அது கலப்படத்தைக் குறிக்கிறது.

இறைச்சி

இறைச்சியை அழுத்தவும். அது மிகவும் உறுதியான அல்லது ரப்பர் போல் உணர்ந்தால், அதில் கலப்படங்கள் இருக்கலாம். மேலும், தூய இறைச்சி பிரகாசமான சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு திட்டுகள் இல்லாமல் இயற்கையான நிறத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

கொஞ்சம் தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைக்கவும். சுத்தமான தேங்காய் எண்ணெய் கெட்டியாகிறது, அதே நேரத்தில் கலப்பட எண்ணெய் திரவமாக இருக்கும்

மற்ற எண்ணெய்

உங்கள் உள்ளங்கையில் சில துளிகள் எண்ணெய் ஊற்றி தேய்க்கவும். தூய எண்ணெய் விரைவாக உறிஞ்சப்பட்டு விடும், க்ரீஸ் எச்சத்தை விடாது.

வெண்ணெய்

ஒரு கரண்டியில் ஒரு சிறிய அளவு வெண்ணெய் உருகவும். தூய வெண்ணெய் விரைவாக உருகி பழுப்பு நிறமாக மாறும், அதேசமயம் கலப்பட வெண்ணெய் அதிக நேரம் எடுக்கும் மற்றும் வெள்ளை எச்சத்தை விட்டுவிடும்.

நெய்

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும். தூய நெய் உருகி பழுப்பு நிறமாக மாறும், அதேசமயம் கலப்பட நெய் மேலே எண்ணெயை விட்டுவிடும்.

இந்த வீட்டுச் சோதனைகள் எளிமையானவை, பொதுவான கலப்படங்களைக் கண்டறிய உதவும். இருப்பினும், அனைத்து வகையான கலப்படங்களையும் இதனால் கண்டறிய முடியாது. எனவே நம்பகமான மற்றும் சான்றளிக்கப்பட்ட பிராண்டுகளில் இருந்து உணவுப் பொருட்களை வாங்குவது நல்லது.

Read in English: Rajasthan finds pesticides in MDH, Everest masala: Ways to identify food adulteration at home

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment