நடிகர் ரஜினிகாந்த் அயோர்டிக் அனியூரிசிம் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு டிரான்ஸ்கேதீட்டர் அயோர்டிக் வால்வு மாற்று அறுவை சிகிச்சை (TAVR) செய்யப்பட்டது.
பி.டி.ஐ செய்தியின்படி, ரஜினி செப்டம்பர் 30 அன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திலிருந்து வெளியேறும் முக்கிய இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தது மருத்துவர்கள் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை அல்லாத, டிரான்ஸ்கேட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர் இப்போது ஓய்வு எடுத்து வரும் நிலையில், அயோர்டிக் அனீரிஸம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அறுவைசிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை - வழக்கமான அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது எவ்வளவு பாதுகாப்பானது என்பதைப் பற்றி மேலும் அறிய, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் சுகாதார நிபுணர்களிடம் பேசப்பட்டது.
மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் interventional radiology பிரிவின் மூத்த மருத்துவர் விமல் சோமேஷ்வர் கூறுகையில், இந்த செயல்முறையானது அனியூரிசிம் முழுவதும் ஸ்டென்ட் கிராஃப்ட் வைப்பது ஆகும். இதை செய்வதன் மூலம் அனீரிஸத்தின் விரிந்த பகுதிக்குள் ரத்தம் நுழைவது தடுக்கப்படுகிறது. அதே நேரம் தமனி அமைப்பினுள் வழக்கமான இரத்த ஓட்டம் இருப்பதை உறுதி செய்யும்.
இது வழக்கமான அறுவை சிகிச்சையை விட பாதுகாப்பானது தான். ஏனெனில் இதில் கத்தி கொண்டு இதயப் பகுதியை கிழித்து சிகிச்சை அளிக்கத் தேவையில்லை.
ஆங்கிலத்தில் படிக்க: Treatment for Rajinikanth’s aortic aneurysm included a non-surgical transcatheter method. What does recovery look like?
இதற்கு பதிலாக, இடுப்பு பகுதியில் உள்ள தொடை தமனிகளில் சிசிக்சை செய்யப்படுகிறது, சிறுநீரகங்கள் அல்லது குடல் போன்ற அருகிலுள்ள இரத்த நாளங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“