Advertisment

சென்னை ஸ்டார் ஹோட்டலில் ஃபேமஸ் பிரியாணி: இதற்கு சூப்பர் ஸ்டார் சூட்டிய பெயர் தெரியுமா?

சென்னை ஸ்டார் ஹோட்டல் டேஸ்டி பிரியாணிக்கு பெயர் சூட்டிய ரஜினிகாந்த்; என்ன பெயர் தெரியுமா?

author-image
WebDesk
New Update
Rajinikanth Ghilli biryani

சென்னை ஸ்டார் ஹோட்டல் டேஸ்டி பிரியாணிக்கு பெயர் சூட்டிய ரஜினிகாந்த் (பிரதிநிதித்துவ படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரியாணி அனைவருக்கும் பிடித்த உணவு. சமீபகாலமாக அதிகம் விரும்பப்படும் உணவாக பிரியாணி இருந்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை மூலைக்கு மூலை பிரியாணி கடை உள்ளது. அந்த அளவிற்கு மக்களால் பிரியாணி விரும்பப்படுகிறது. 

Advertisment

சென்னையில் பல்வேறு ஸ்டைல் பிரியாணி இருந்தாலும், தாஜ் கோரமண்டலில் உள்ள பிரபலமான கில்லி பிரியாணி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பிரியாணியாகும். சுவாரஸ்யமாக, இந்தப் பிரியாணிக்கு பெயர் சூட்டியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என TOI செய்தி வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலான தாஜ் கோரமண்டலுக்கு அடிக்கடி செல்வது அனைவரும் அறிந்ததே. இந்தநிலையில், தாஜ் கோரமண்டலில் இன்றும் பிரபலமான உணவான பிரியாணிக்கு ரஜினிகாந்த் பெயரிட்டதாக அந்த ஹோட்டலைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஒருமுறை, ரஜினிகாந்த், தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தான் சாப்பிட்ட வித்தியசமான சுவைக் கொண்ட பிரியாணி குறித்து கேட்டுள்ளார். அதற்கு சமையல் கலைஞர் ஒருவர் பிரியாணியில் ரோகன் மசாலாவைச் சேர்த்து பரிமாறியிருக்கிறார். உடனே ரஜினிகாந்த் அந்த பிரியாணியால் ஈர்க்கப்பட்டு, வெளிப்படையாக 'கில்லி மாதிரி இருக்கு' என்று கூறியதாக தெரிகிறது, அதிலிருந்து அந்த பிரியாணிக்கு 'கில்லி பிரியாணி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தாஜ் ஹோட்டலில் உள்ள உணவகத்தில் 'கில்லி பிரியாணி' மிகவும் விரும்பப்படும் உணவாக உள்ளது, இதில் பிரியாணிக்காக மட்டுமே ஏராளமான விசுவாசமான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Rajinikanth Briyani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment