கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்தும் உதவி: பொன்னம்பலம் மருத்துவச் செலவை ஏற்றார்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறேம்.  சிகிச்சை தொடர்பாக நாங்கள் மருத்துவரிடம் பேசுகிறோம்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறேம்.  சிகிச்சை தொடர்பாக நாங்கள் மருத்துவரிடம் பேசுகிறோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor ponnambalam health news, rajinikanth ,

actor ponnambalam health news, rajinikanth ,

சிறுநீரக பிரச்சினை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுள்ளார்.

Advertisment

முன்னதாக, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன்,  மருத்துவமனையில் உள்ள பொன்னம்பலத்திடம்  தினமும் காணொலி மூலம் பேசி வருவதாகவும், அவரது முன்னேற்றத்தைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏழ்மை சூழலை கருத்தில் கொண்ட கமல், பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஏற்றுக்கொண்டதாகும்  கூறப்பட்டது.

 

Advertisment
Advertisements

இந்நிலையில், பொன்னம்பலத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் ரஜினி,"சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறேம்.  சிகிச்சை தொடர்பாக நாங்கள் மருத்துவரிடம் பேசுகிறோம். எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம்" என்று தெரிவித்தார்.

நடிகர்கள் சரத்குமார், விஷால், கார்த்திக் ஆகியோரும் தக்க சமயத்தில் தனக்கு உதவி புரிந்ததாகவும், விரைவில் உடல்நலம் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள விரும்புவதாகவும் நடிகர் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன்,  நாட்டாமை, முத்து, இந்தியன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம், பிக் பாஸ் நிகழ்ச்சியின்  2-வது சீசனில் ஹவுஸ்மேட்டாக இருந்து அனைவரின் வரவேற்பையையும் பெற்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kamal Haasan Rajini Kanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: