ரக்ஷா பந்தன் இன்று கொண்டாட்டம்: வரலாறும் முக்கியத்துவமும்!

Raksha Bandhan 2020: சகோதரிகள் சகோதரர்களின் மணிக்கட்டில் ‘ராக்கி’ கட்டுவதோடு, அவர்களை எப்போதும் பாதுகாப்பதாக உறுதியளிப்பதோடு இந்த மரபு தொடர்கிறது. ராக்கி கயிறு சகோதரர்களுக்கு ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது

By: Updated: August 3, 2020, 08:04:38 AM

Raksha Bandhan 2020: இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ஒன்றான ரக்ஷா பந்தன். ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதன் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

‘ரக்ஷா பந்தன்’ என்பதற்கு உடன்பிறப்புகள் ஒருவருக்கொருவர் எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பின் பிணைப்பையும் பாதுகாப்பையும் உறுதியளிப்பது என்று பொருள். ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படும் நாள் ஒவ்வொரு ஆண்டும் தேதிகள் மாறுபட்டாலும் இந்த பண்டிகை பொதுவாக ஆண்டின் இந்த நேரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 3ம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் திருவிழாக்கள் வரலாறு மற்றும் தொன்ம முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நம்புகிறார்கள். மகாபாரதத்தில், கிருஷ்ணன் திரௌபதியுடன் தெய்வீக உரையாடலின்போது தனது விரலை வெட்டிக்கொண்டார். ​உடனே திரௌபதி தனது சேலையை கிழித்து அந்த துணியப் பயன்படுத்தி கிருஷ்ணனின் காயத்துக்கு கட்டுப் போட்டார். இதனால், கிருஷ்ணன் அவளை எப்போதும் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தார். குறிப்பாக அஸ்தினாபுர அரசவையில் திரௌபதி துகிலுரியப்படடபோது அவர் திரௌபதிக்கு வஸ்திரம் அளித்து காத்தார்.

பல ஆண்டுகளாக, சகோதரிகள் சகோதரர்களின் மணிக்கட்டில் ‘ராக்கி’ கட்டுவதோடு, அவர்களை எப்போதும் பாதுகாப்பதாக உறுதியளிப்பதோடு இந்த மரபு தொடர்கிறது. ராக்கி கயிறு சகோதரர்களுக்கு ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது. இப்போதெல்லாம், பல்வேறு வண்ணங்களில் அழகழகான வடிவமைப்புகளில் ராக்கி கயிறுகள் வந்துவிட்டன.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி ரக்ஷா பந்தன் நாளில் ராக்கியைக் கட்டுவதற்கான நல்ல நேரம் காலை 9.28 மணி முதல் இரவு 9.17 மணி வரை என்று நம்பப்படுகிறது. ராக்கி கட்டும் சடங்கின்போது, ​​சகோதரர்கள் கிழக்கு நோக்கி அமர வேண்டும். ஏனெனில், இது அவர்களின் தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளையும் சக்தியையும் கொண்டுவரும் என நம்பிக்கை என்று டாக்டர் ‘நியதி பை ஆர்த்தி’ நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஆர்த்தி தஹியா கூறுகிறார்.

ராக்கி கயிறுக்கு வளம் சேர்வதற்காக குங்குமம் மஞ்சள் வைக்க வேண்டும். “உடைந்த அரிசி தானியங்களுக்கு பதிலாக, எப்போதும் திலகமிடுவதற்கு முழு அரிசி தானியங்களை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது உங்கள் சகோதரனின் செல்வத்தை அதிகரிக்கும். அதற்கு முன்பு நீங்கள் உங்கள் கடவுளை வணங்கி ராக்கியை கட்ட வேண்டும். அந்த நாளில் உடன்பிறப்புகள் அருகே இல்லையென்றால் அவர்களுடைய பெண் நண்பர்களும் அல்லது குடும்ப உறுப்பினரான எந்த பெண்ணும் சகோதரி சார்பாக ராக்கி நூலைக் கட்டலாம்” என்று உறவுகள் பற்றிய நிபுனர் டாக்டர் ஆர்த்தி தஹியா கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Raksha bandhan 2020 history good time for rocky tie

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X