’லேடி புள்ளிங்கோ’வான ’நாம் இருவர் நமக்கு இருவர்’ தேவி!

Raksha Holla: உணவுப் பிரியையான இவருக்கு, சிக்கன் என்றால் கொள்ளை பிரியமாம். 

By: Updated: November 8, 2019, 01:32:00 PM

Naam Iruvar Namakku Iruvar Devi: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் மாயனுக்கு ஜோடியாக தேவி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ரக்‌ஷா ஹொல்லா.

raksha Holla lifestyle ரக்‌ஷா ஹொல்லா

கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட ரக்‌ஷா,  ஜனவரி 26, 1991-ல் பெங்களூரில் பிறந்தார். அவரது குடும்பம், பாரம்பரிய விவசாயக் குடும்பம். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் ரக்‌ஷாவின் ஆசை. படிப்பை முடித்த பிறகு, தனது 22 வயதில் அவர் நடிக்கத் தொடங்கினார். இவரது உயரம் 175 செ.மீ, அதாவது கிட்டத்தட்ட 6 அடி. அதோடு நன்றாக நடனமும் ஆடுவார்.

raksha Holla lifestyle கணவர் ராகேஷுடன்

ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்த ரக்‌ஷா, பிறகு கன்னட சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ’புட்டிண்டி பட்டு சேரா’ என்ற கன்னட சீரியல் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அந்த சீரியலில் பிரபல நடிகர்களான ஸ்ரீ திவ்யா, யாமினி பாஸ்கர், ராமாயணம் கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தார்கள். அதன் பிறகு தமிழ் சீரியல்களில் நடிப்பதற்காக சென்னை வந்தார். இருப்பினும், ஏற்கனவே ரக்‌ஷாவுக்கு  சென்னையில் சில நண்பர்கள் இருந்தார்கள்.

raksha Holla lifestyle லேடி புள்ளிங்கோ…

இதற்கு முன்பு, ‘வம்சம்’, ‘தமிழ் கடவுள் முருகன்’ ஆகிய தமிழ் சீரியல்களிலும் ரக்‌ஷா நடித்துள்ளார். தனது குழந்தை பருவ நண்பரான ராகேஷை, ரக்‌ஷா கரம் பிடித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. உணவுப் பிரியையான இவருக்கு, சிக்கன் என்றால் கொள்ளை பிரியமாம்.  நடிகை குஷ்பூவின் தீவிர விசிறியான ரக்‌ஷாவுக்கு, ப்ளூ கலர் தான் ஃபேவரிட்! நடிகர்களைப் பொறுத்தவரை விஜய்யின் வெறித்தன ரசிகை. ’லேடி புள்ளிங்கோ’ என இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் கூட போட்டிருக்கிறார்!

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Raksha holla vijay tv naam iruvar namakku iruvar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X