Advertisment

சுவரோவியங்கள், கலைப் படைப்புகள்: ராமாயண அடையாளங்கள் நிறைந்த அயோத்தி விமான நிலையம்

சிவப்புக் கல்லால் கட்டப்பட்ட, நுழைவாயிலில் இருந்து முனையத்தின் உட்புறம் வரை செதுக்கப்பட்ட தூண்கள், பழைய கோயில் கட்டிடக்கலையை நவீன உள்கட்டமைப்புடன் இணைக்கும்.

author-image
WebDesk
New Update
ayodhya airport

Upcoming Ayodhya airport awash with Ramayana theme

சுவரோவியங்கள், கலைப் படைப்புகள் முதல் பொறிக்கப்பட்ட வேதங்கள் வரை..  நாகரா பாணியில் கோயில் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட அதன் முனையம்- என அயோத்தியில் வரவிருக்கும் விமான நிலையம் ராமாயண அடையாளங்கள் நிறைந்த இடமாகும்.

Advertisment

மரியதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ள இது, ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு திறப்பு விழாவிற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

திட்டத்தின் கட்டடக்கலை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள வல்லுனர்கள் கூறுகையில், வட இந்தியாவின் பழங்கால இந்துக் கோயில்களின் நாகரா கட்டிடக்கலையின் அடிப்படையில் விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது - இதுவே அயோத்தியில் கட்டுமானத்தில் உள்ள ராமர் கோயிலிலும் பயன்படுத்தப்படுகிறது.      

சிவப்புக் கல்லால் கட்டப்பட்ட, நுழைவாயிலில் இருந்து முனையத்தின் உட்புறம் வரை செதுக்கப்பட்ட தூண்கள், பழைய கோயில் கட்டிடக்கலையை நவீன உள்கட்டமைப்புடன் இணைக்கும்.

ராமாயணத்தின் பின்னணியில் சுவரோவியங்கள் மற்றும் கலைப்படைப்புகளை நிறுவும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

முனையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ராமரின் படங்களுடன் கூடிய "வில் மற்றும் அம்பு" சுவரோவியம் மற்ற கலைப்படைப்புகளுடன் முக்கிய கருப்பொருள்களில் ஒன்றாக இருக்கும்.

65,000 சதுர அடி அளவிலான முனையத்தின் கூரை ஏழு மெகா நெடுவரிசைகளால் (mega columns) ஆதரிக்கப்படும், இது ராமாயணத்தின் ஏழு "காண்டங்கள்" அடையாளமாக இருக்கும்.

ழங்கால கோயில்களைப் போலவே, விமான நிலைய முனையமும் செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் ஒரு 'ஷிகாரா' (கோபுரம்) கொண்ட செவ்வக அடித்தளத்தைக் கொண்டிருக்கும்.

விமான நிலைய வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள முக்கிய கட்டிடக் கலைஞரான ஹர்ஷ் வர்ஷ்னேயா கூறுகையில், ’இந்த விமான நிலையம் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகளை கம்பீரமாவரவேற்கும். சிக்கலான சிற்பங்கள் மற்றும் கலைப்படைப்புகள் அயோத்தியின் பெருமை மற்றும் செழுமையான பாரம்பரியத்தின் கதையைச் சொல்லும்.

முதல் பேஸில், எட்டு ஏப்ரன்கள் கொண்ட முனையம் 350 க்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 2-3 விமான வசதி வழங்கும். 2,200 மீட்டர் ஓடுபாதை சிறிய விமானங்கள் தவிர போயிங் 737, ஏர்பஸ் 319 மற்றும் ஏர்பஸ் 320 போன்ற பெரிய விமானங்களை தரையிறக்க அனுமதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போயிங் 787 அல்லது போயிங் 777 போன்ற பெரிய விமானங்களை தரையிறக்க அனுமதிக்கும் வகையில் ஓடுபாதையை 3,700 மீட்டருக்கு விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதியா சிந்தியா ஆகியோர் விமான நிலையத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தனர். முதல்வர் டிசம்பர் 15-ம் தேதி பணியை முடிப்பதற்கான காலக்கெடுவாக நிர்ணயித்திருந்தார், ஆனால் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் டிசம்பர் இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று தெரிவித்தனர்.

Read in English: Murals, artworks & engraved scriptures: Upcoming Ayodhya airport awash with Ramayana theme

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ayodhya Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment