Advertisment

ராம நவமி 2024: இரவு 7 மணி வரை டைம்; பால் பாயாச படையல்; வீட்டில் ராமரை வழிபடும் முறை இதுதான்!

ஸ்ரீ ராம நவமி அன்று அனுசரிக்க வேண்டிய விரத முறை, பலன்கள் குறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில், ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே

author-image
WebDesk
New Update
Rama Navami 2024

Rama Navami 2024

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர்.

Advertisment

பங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம். சில வருடங்களில் இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் அமைவதும் உண்டு. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் பெற்ற ஸ்ரீராமரையும் அவர் ஜாதகத்தையும் இந்த ராமநவமி நாளில் பூஜிப்பது நமக்கு எல்லாவித அருளையும், பொருளையும் வாரிவழங்கும்.

ஸ்ரீ ராம நவமியன்று விசிறிகளை பிறருக்கு தானமாக வழங்குகின்றனர். ஸ்ரீ ராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீ ராம நவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு.

ராம நவமி தினத்தில் விரதமிருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர் மற்றும் மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.

மேலும், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும் என்பது ஐதீகம்

இந்த ஆண்டு, ராம நவமி விழா ஏப்ரல் 17, 2024 அன்று கொண்டாடப்படுகிறது. அன்று காலை 10. 30 முதல் மதியம் 11. 30 மணி வரை ஸ்ரீ ராமரை வழிபடுவதற்கான உகந்த நேரம் ஆகும். காலையில் 7.30 முதல் 9  மணி வரை எமகண்டம் இருப்பதால், காலை 7. 30 மணிக்கு முன்பாக ராமநவமி பூஜை செய்யலாம் அல்லது 9 மணிக்கு மேல் துவங்கலாம்.

ஸ்ரீ ராம நவமி அன்று அனுசரிக்க வேண்டிய விரத முறை, பலன்கள் குறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில், ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment