/indian-express-tamil/media/media_files/QFU7m1Pe8jKuSVtckZ5J.jpg)
"பொதுமக்கள் குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்கள் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்." என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
Ramanathapuram: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல் காற்று வீசும் காலங்களில் பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும், அந்நேரங்களில் பயணம் செல்ல நேரிட்டால் குடிதண்ணீர் எடுத்துச் செல்வதுடன், கண்ணாடி மற்றும் காலனி அணிந்து குடையுடன் பாதுகாப்பாக செல்லவும்.
அனல் காற்று வீசும் காலங்களில் தாகம் எடுக்காவிட்டாலும் கூட அவ்வப்போது போதுமான தண்ணீர் அருந்தவும். வீட்டில் ORS (Oral Rehydration Solution) தயாரித்து நீர் மோர், லஸ்ஸி, புளித்த சோற்று தண்ணீர், எலுமிச்சைசாறு போன்ற பானங்களை அருந்தவும். அனல் காற்று வீசும் காலங்களில் வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும்.
மேலும் குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும்.
பொதுமக்கள் குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்கள் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம். உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்.
வீடுகளில் தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்க்கவும். தொலைபேசி முதியவர்களின் அருகாமையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். முதியவர்கள் வெப்ப அழுத்ததால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும், குளிர்ந்த நீரில் குளிப்பதுடன் போதிய இடைவேளைகளில் நீர் அருந்தவும்.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய மேற்கண்ட பாதுகாப்பு குறிப்புகளை கடைபிடித்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.