கன்னியாகுமரியில் 8 அடி உயர ராமானுஜர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
Advertisment
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ராமானுஜரின் 8 அடி உயர சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக முதலில் திறந்துவைப்பதாக இருந்தது.
பின்னர் இந்நிகழ்ச்சி மாற்றப்பட்டு, வைணவ தமிழ் துறவி ராமானுஜரின் சிலையை யதுகிரி யதிராஜமடம் 41ஆவது பட்டம் பீடாதிபதி யதுகிரி யதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதையடுத்து, சுவாமி ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பகவத் ராமானுஜர் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடந்தது. அப்போது, “காஷ்மீர் மற்றும் அயோத்தி வரிசையில் மூன்றாவது இடமாக கன்னியாகுமரியில் ராமானுஜர் சிலை திறக்கப்பட்டுள்ளது மிக சிறப்பானது” எனத் தெரிவித்தார்
தொடர்ந்து, “நாட்டின் 8 திசைகளிலும் பகவத் ராமானுஜரின் சிலையை வைக்க திட்டமிட்டுளோம்” என்றும் தலைமை மடாதிபதி யதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil