ஆர்.டி.ஓ ஆபீஸில் சாதாரண வேலை… இன்று விஜய் டிவியின் நம்பர்.1 காமெடியன்!

ராமர் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது இரண்டே விஷயம் தான். ஒன்று, அயோத்தி ராமர் கோவில் சர்ச்சை இரண்டாவது, விஜய் டிவி ராமர் ஜெர்க் ஆக வேண்டாம். இதில், நாம பார்க்கப் போவது இரண்டாவது கேட்டகிரி ராமர் தான்.  ‘ஆத்தாடி என்ன உடம்பி’ என்ற அழகான…

By: November 25, 2019, 5:38:08 PM

ராமர் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது இரண்டே விஷயம் தான்.

ஒன்று,

அயோத்தி ராமர் கோவில் சர்ச்சை

இரண்டாவது,

விஜய் டிவி ராமர்

ஜெர்க் ஆக வேண்டாம். இதில், நாம பார்க்கப் போவது இரண்டாவது கேட்டகிரி ராமர் தான்.


‘ஆத்தாடி என்ன உடம்பி’ என்ற அழகான வார்த்தையை நமக்கு அறிமுகம் செய்து, அதை ஹிட்டடிக்கவும் வைத்தவர் ராமர்.

‘என்னமா இப்படி பண்றீங்களேமா’ என்ற டயலாக் இவரது டிரேட் மார்க்காக இருந்த காலம் போய், இன்று ராமர் என்று சொன்னாலே யாரென்று தெரியும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

ராமரின் சொந்த ஊர், மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டியாகும்.

சின்ன வயசுல இருந்தே நம்ம ஹீரோவுக்கு நடிப்பு மேல்  பயங்கர ஆர்வம். ஸ்கூல், காலேஜ் என்று அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்தவர், அவரது மாமாவுடன் சேர்ந்து ஆர்.டி.ஓ ஆபீஸில் தற்காலிக வேலை செய்து வந்திருக்கிறார்.

இருந்தாலும், அவ்வப்போது உள்ளூர், வெளியூர் என்று சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மூலமாக தன் திறமையை வெளிக்காட்டிக் கொண்டே இருந்தார்.

இவரது மனைவி கிருஷ்ணவேணி தான் ராமருக்கு எனர்ஜி பூஸ்ட் என்றால் அது மிகையல்ல. வீட்டில் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள். எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட் படித்திருக்கும் கிருஷ்ணவேணி, காலேஜில் சிறப்பு விரிவுரையாளராக பணி புரிகிறார். இரண்டு பெண், ஒரு ஆண் என்று மூன்று பிள்ளைகள் இத்தம்பதிக்கு.

வடிவேலு தான் ராமரின் ரோல் மாடல். ‘நாம எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் மத்தவங்களைச் சிரிக்கவைக்கிறது ஒரு கலை. அந்தக் கலை என்கிட்ட இருக்குன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. இன்னும் நிறைய பேரைச் சிரிக்க வைக்கணுங்குறதுதான் என் ஆசை’ என்று அடிக்கடி சொல்வாராம் ராமர்.

ராமர் லேடி கெட்டப் போடுவது அவர் மனைவிக்கு பிடிக்காது என்றாலும், மக்களுக்கு அது பிடித்திருப்பதால் ஏற்றுக் கொள்வாராம். தவிர, ராமர் லேடி கெட்டப்பில் தனது மாமியாரைப் போலவே இருப்பார் என்று சைடு கேப்பில் கோல் போட்ட கிருஷ்ணவேணி, ராமரையே ஒரு நொடி முழிக்க வைத்துவிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Ramar comedy video vijay tv hot star kalakka povathu yaaru champions ramar veedu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X