இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள்; கைதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
Rameshwar fisher protest

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

இராமேஸ்வரம் மீனவர்கள் கைதை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர்.

அவர்கள் 3 பேரும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர்.

அவர்களை விசாரித்த ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி வரும் ஏப்ரல் 1 ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மூன்று மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Advertisment
Advertisements

மீனவர்களையும் விசைப்படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இராமேஸ்வரத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட விசைப்படைகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Fishermen Rameshwaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: