ரொம்ப டார்ச்சர்! அம்மா வெளியே போனாலே வீடு அமைதியா இருக்கும்: ரம்யா கிருஷ்ணன் மகன் ஓபன் டாக்

ரொம்ப பாசமானவங்க. அம்மா வெளியூர் ஷூட்டிங் போனா, ரொம்பவே மிஸ் பண்ணுவேன். ஆனா, ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அவங்க வெளியே போனாலே வீடே அமைதியா இருக்கும்.

ரொம்ப பாசமானவங்க. அம்மா வெளியூர் ஷூட்டிங் போனா, ரொம்பவே மிஸ் பண்ணுவேன். ஆனா, ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அவங்க வெளியே போனாலே வீடே அமைதியா இருக்கும்.

author-image
WebDesk
New Update
Ramya krishnan

Ramya krishnan Family

திரையுலகில் ஒரு நடிகை தன் திறமையால் பல தசாப்தங்களாக நிலைத்து நிற்பது அரிது. ஆனால், ரம்யா கிருஷ்ணன் அந்த அரிதான சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். வெறும் நடிப்பு மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்தது.

ரம்யா கிருஷ்ணனின் வாழ்க்கை, சினிமா போலவே காதல் நிறைந்த ஒரு கதை. 1998-ல் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கிய "சந்திரலேகா" படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்தார். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் அரும்பியது.  பெற்றோரின் சம்மதத்துடன், 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி ஹைதராபாத்தில் எளிமையாகத் திருமணம் செய்துகொண்டனர். கிருஷ்ணா வம்சியுடனான திருமணத்திற்குப் பிறகு, ரம்யா கிருஷ்ணனுக்கு ரித்விக் என்ற அழகான மகன் பிறந்தார்.

Advertisment

திருமணத்திற்குப் பிறகும் ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் தீவிரமாக இயங்கினார். குறிப்பாக, பாகுபலி படத்தில் "ராஜமாதா சிவகாமி" கதாபாத்திரம் அவரது இரண்டாவது இன்னிங்ஸிற்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரை தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் என பல தளங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவரது சினிமா பயணத்திற்கு அவரது கணவர் கிருஷ்ணா வம்சியும், மகன் ரித்விக்கும் முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அவள் கிளிட்ஸ் யூடியூப் நேர்காணலில் ரம்யா கிருஷ்ணன் மகன் ரித்விக் கலந்து கொண்டு தன் அம்மாவை பற்றி பேசினார். 

Advertisment
Advertisements

”அம்மா மேல எனக்கு ரொம்ப பாசம் உண்டு. ஆனா, அவங்க நிறைய விஷயங்கள்ல டார்ச்சர் பண்ணுவாங்க. "அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே," "ஜங்க் ஃபுட் சாப்பிடாதே, அது சாப்பிடாதே"ன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க.

ஆனா, ரொம்ப அன்பானவங்க. ரொம்ப பாசமானவங்க. அம்மா வெளியூர் ஷூட்டிங் போனா, ரொம்பவே மிஸ் பண்ணுவேன். ஆனா, ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அவங்க வெளியே போனாலே வீடே அமைதியா இருக்கும்” என ரித்விக் கலகலப்பாக பேசினார். 

”நான் முதல்ல பாகுபலி படம் பண்ணும்போதுதான் வெளியூர் ஷூட்டிங்கிற்கு ஒத்துக்கிட்டேன். அதற்கு முன்னாடி வெளியூருக்கு போனதில்லை. அப்போ ஆறு வயசு அவனுக்கு. ஷூட்டிங் போனா அழுவான். அப்போ அடிக்கடி போன் பண்ணி "எப்போ வருவீங்க, எப்போ வருவீங்க"ன்னு கேட்டுகிட்டே இருப்பான். இப்போலாம் "எப்போ ஷூட்டிங், எப்போ கிளம்புறீங்க?"ன்னு கேட்குறான்” என்று நக்கலாக பேசினார் ரம்யா கிருஷ்ணன்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: