ramya pandian instagram ramya pandian interview vijay tv : சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்கள் திடீரென்று பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை சமூக பாண்டியன்.ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலக நடிகையாக அறிமுகம் ஆனார்.
Advertisment
அதன் பின்பு, தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்த ரம்யா, சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்திலும் நடித்திருந்தார். இருந்த போதும் ரம்யா பாண்டியனுக்கு மிகப் பெரிய வாய்ப்பை கொடுத்தது மொட்டை மாடியில் அவர் நடத்திய ஃபோட்டோ ஷூட் தான்.
பின்பு, ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியின் சமையல் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்க ரம்யாவுக்கு விஜய் டிவி வாய்ப்பு வழங்கியது.
Advertisment
Advertisements
இந்த நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் ரம்யா பாண்டியன். நிகழ்ச்சியின் இடையிடையே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி விதம் விதமான புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வந்தார். அதுமட்டுமில்லை ரம்யா பாண்டியனுக்கு நடிகர் விஜய் தான் மிகவும் பிடித்தமான நடிகர்.
A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on
திருநெல்வேலி பொண்ணான ரம்யா, முதன் முதலில் குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார். குறும் படங்களுக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. தனது வீட்டு மொட்டை மாடியில் தோட்டமே பயிருட்டு அதை பாதுக்காத்து வருவது தான் ரம்யாவின் மிகப் பெரிய ஹாபி. பேஷனில் ரம்யாவின் செலக்ஷன் எப்போதுமே சூப்பர் தான். அவரின் உடைகளின் தேர்வு கூட மிகவும் வித்யாசமானதாக இருக்கும்.
குத் வித் கோமாளியில் அடைந்த புகழ் பிக் பாஸ் வரை ரம்யாவை அழைத்து செல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil