உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ரிஷிகேஷ், ஒரு பிரபலமான ஆன்மிக நகரம்.
சமீபத்தில் ரம்யா பாண்டியன் ரிஷிகேஷ் நகரத்துக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோஸை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
’தெய்வ பூமி என்று அழைக்கப்படும் ரிஷிகேஷ், 21 மறக்க முடியாத நாட்களை என் இதயத்தில் பதித்துள்ளது. ஆசிரமத்திற்கு அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் செல்லும் வழியில் கங்கையின் வழியே அமைதியான நடைப் பயணத்துடன் காலை தொடங்கியது, அங்கு நான் என் கால்களை நனைத்து, கங்கா மாவை மனதாரப் பிரார்த்தனை செய்தேன்.
ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்கள், ஊட்டமளிக்கும் சாத்விக் உணவுகள், கங்கா ஆரத்தியால் அலங்கரிக்கப்பட்ட மாலை வேலைகளையும் கொண்டு வந்தது. இயற்கை அமைதியுடன் நடந்து சென்றது, கங்கா அம்மா நீரின் நிலையான ஒலி ஒரு தியான பின்னணியை வழங்கியது.
ரிஷிகேஷ், என் இதயம் உன்னிடம் உள்ளது’
இதேபோல் ரிஷிகேஷில் யோகா கலையில் செலவிட்ட நேரம் குறித்தும் ரம்யா பகிர்ந்துள்ளார்…
யோகா பல ஆண்டுகளாக எனது வாழ்க்கை முறையின் அழகான பகுதியாக இருந்து வருகிறது, ஆனால் எனது அறிவின் தாகம் என்னை ஆழமாக ஆராய வழிவகுத்தது.
வாழும் கலையை கற்க இதைவிட சிறந்த இடம் எது?
இந்த 200 மணிநேரப் பயிற்சி, தியானம், பிராணாயாமம், ஆசனங்கள் மற்றும் ஆழ்ந்த யோக சூத்திரங்கள் ஆகியவற்றின் ஞானத்தில் என்னை மூழ்கடித்தது - காலத்தால் அழியாத உலகளாவிய அறிவு மற்றும் யோகிகளின் பூமியான ரிஷிகேஷ் போன்ற ஒரு இடத்தில் இந்த அனுபவத்தை பெற்றதற்கு நான் பாக்கியமாக உணர்கிறேன்’, என்று பதிவிட்ட ரம்யா தான் வாங்கிய யோகா டீச்சர் டிரெயினிங் சான்றிதழையும் அதில் பகிர்ந்திருந்தார்...
ரிஷிகேஷில் என்ன பார்க்கலாம்?
இமயமலையில் உருவாகும் புனித கங்கை நதி, சமதளத்தில் பாயும் முதல் இடமாக ரிஷிகேஷ் அமைந்துள்ளதால், இதற்கு தனிச் சிறப்புண்டு. இந்த ரிஷிகேஷில், அதிகமான துறவிகள் தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய இமயமலையில் சங்கமித்திருக்கும் இந்த புனிதத் தலங்களுக்கு, வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.
ஹரித்துவார் புண்ணிய ஸ்தலத்திலிருந்து, சுமார் 25 கி.மீ. தொலைவில், ரிஷிகேஷ் அமைந்துள்ளது.
இங்குள்ள ராம் ஜுலா, லக்ஷ்மண் ஜீலா, சிவானந்தா ஆசிரமம், பரமாத் நிகேதன் ஆசிரமம் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். ஷிவாலிக் மலையடிவாரத்தில் அமைந்துள்ள ராஜாஜி நேஷனல் பார்க், இயற்கை அழகும், பல விதமான காட்டு விலங்கு மற்றும் பறவைக்கு வீடாகவும் அமைந்துள்ளது.
ரிஷிகேஷில் பல அருவிகள் உள்ளன. அதில் நீர் கர் நீர்வீழ்ச்சி, பலரும் அறிந்திடாத ஒரு பொக்கிஷம்.
இதெல்லாம் கொஞ்சம் தான். இன்னும் நீங்கள் பார்க்கவும், ரசிக்கவும், ஆன்மிகத்தில் திளைக்கவும் பல பொக்கிஷங்கள் ரிஷிகேஷில் நிரம்பி இருக்கிறது…
இங்கு ஆன்மிகம், அதனுடன் அட்வண்ட்சர் நிறைந்த சாகச விளையாட்டுகளும் நீங்கள் வாழ்வில் அவசியம் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள்….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“