நடிகை ரம்யா பாண்டியன் யோக கலையில் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் ரிஷிகேஷ் சென்ற ரம்யா அங்கு வசிஷ்ட குகையில் தியானம் செய்தபோது தனக்கு கிடைத்த அனுபவங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
ரிஷிகேஷில் என்ன பார்க்கலாம்?
இமயமலையில் உருவாகும் புனித கங்கை நதி, சமதளத்தில் பாயும் முதல் இடமாக ரிஷிகேஷ் அமைந்துள்ளதால், இதற்கு தனிச் சிறப்புண்டு. இந்த ரிஷிகேஷில், அதிகமான துறவிகள் தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய இமயமலையில் சங்கமித்திருக்கும் இந்த புனிதத் தலங்களுக்கு, வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.
ஹரித்துவார் புண்ணிய ஸ்தலத்திலிருந்து, சுமார் 25 கி.மீ. தொலைவில், ரிஷிகேஷ் அமைந்துள்ளது.
இங்குள்ள ராம் ஜுலா, லக்ஷ்மண் ஜீலா, சிவானந்தா ஆசிரமம், பரமாத் நிகேதன் ஆசிரமம் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். ஷிவாலிக் மலையடிவாரத்தில் அமைந்துள்ள ராஜாஜி நேஷனல் பார்க், இயற்கை அழகும், பல விதமான காட்டு விலங்கு மற்றும் பறவைக்கு வீடாகவும் அமைந்துள்ளது.
ரிஷிகேஷில் பல அருவிகள் உள்ளன. அதில் நீர் கர் நீர்வீழ்ச்சி, பலரும் அறிந்திடாத ஒரு பொக்கிஷம்.
இதெல்லாம் கொஞ்சம் தான். இன்னும் நீங்கள் பார்க்கவும், ரசிக்கவும், ஆன்மிகத்தில் திளைக்கவும் பல பொக்கிஷங்கள் ரிஷிகேஷில் நிரம்பி இருக்கிறது…
இங்கு ஆன்மிகம், அதனுடன் அட்வண்ட்சர் நிறைந்த சாகச விளையாட்டுகளும் நீங்கள் வாழ்வில் அவசியம் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள்….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“