பழைய மாதிரி இல்லை: ரம்யா பாண்டியன் புதிய போட்டோஷூட் உங்களுக்கு புடிச்சிருக்கா?

Ramya Pandian Instagram Photos எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தபோதிலும், இவருக்கு இருக்கும் ரசிகர்களின் கொண்டாட்டம் இன்னும் குறையவில்லை.

Ramya Pandian Latest Photoshoot Instagram Photos Tamil News
Ramya Pandian Latest Photoshoot

Ramya Pandian Latest Photoshoot Tamil : ஒரேயொரு போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ரம்யா பாண்டியன். இந்த வைரல் போட்டோவிற்கு பிறகுதான் போட்டோஷூட் என்ற வார்த்தை பிரபலமானது என்றும்கூட சொல்லலாம். சாமானிய மக்களையும் வித்தியாச ஆங்கிளில் புகைப்படங்கள் எடுக்கத் தூண்டிய இவருடைய சமீபத்திய போட்டோஷூட் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது எனலாம்.

Ramya Pandian Latest Photoshoot Instagram Photos Tamil News
Ramya Pandian Latest Photoshoot

தன் அக்காவின் டிசைனர் பொட்டிக்கிற்காக போட்டோஷூட் செய்ய ஆரம்பித்தவர், நாளடைவில் நடிப்பு மீது ஈர்ப்பு ஏற்பட்டு ‘மானே தேனே பொன்மானே’ குறும்படம் மூலம் தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார் ரம்யா. இதனைத் தொடர்ந்து, ‘கூந்தலும் மீசையும்’, ‘டம்மி டப்பாசு’ மற்றும் ‘ஜோக்கர்’ திரைப்படங்களில் நடித்தார். திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் தன் குடும்பத்தினரோடு செட்டிலாகியுள்ளார்.

ரம்யா பாண்டியனின் புடவை போட்டோஷூட்டிற்கு பிறகு, லைம் லைட்டிலேயே இருந்து வந்தார். ‘குக்கு வித் கோமாளி’ முதலாம் சீஸனில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர், பிக் பாஸ் சீசன் 4-ல் தடம் பதித்தார். ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தபோதிலும், இவருக்கு இருக்கும் ரசிகர்களின் கொண்டாட்டம் இன்னும் குறையவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)


போட்டோஷூட் என்றாலே ‘ரம்யா பாண்டியன்தான்’ என்கிற டைட்டில் இருக்கும்போது, இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் நல்ல வரவேற்பினை பெறவில்லை. சிவப்பு மற்றும் பச்சை வண்ண காம்போவில் புடவை. அதற்கு கான்ட்ராஸ்ட்டான வெள்ளைக் கற்கள் பதித்த நெக்லஸ், ஒட்டியாணம் மற்றும் காதணி. கொஞ்சமும் மேட்ச் இல்லாமல் இருக்கும் இந்த காம்போவில் ரம்யாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன் அக்காவின் கைவண்ணத்தில் உருவான உடைகள் அணிந்து ட்ரேட்மார்க் செட் செய்தார் ரம்யா பாண்டியன். ஆனால், இந்த சமீபத்திய போட்டோஷூட் ரம்யாவிற்கு சூட் ஆகவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ramya pandian latest photoshoot instagram photos tamil news

Next Story
இந்தியாவின் நம்பர்.1 பணக்காரர்… ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com