சொல்றவங்க சொன்னா எல்லாரும் கேட்பாங்க… ரம்யா பாண்டியன் யோகா ஸ்டில்ஸ்

Ramya Pandian Latest Photoshoot Yoga and Benefits Tamil News நெஞ்சுப்பகுதியை விரிவாக்கி, போதுமான அளவு ஆக்சிஜனை நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவும்.

Ramya Pandian Latest Photoshoot Yoga and Benefits Tamil News
Ramya Pandian Latest Photoshoot Yoga and Benefits Tamil News

Ramya Pandian Latest Photoshoot Yoga and Benefits Tamil News : ரம்யா பாண்டியன் என்றாலே சென்சேஷன்தான். அந்த வரிசையில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட யோகா தினத்தையொட்டி, கடற்கரையில் யோகா செய்வதுபோன்ற போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஒவ்வொரு ஆசனத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர் பல பயிற்சியாளர்கள்.

அந்த வரிசையில் ரம்யாவின் யோகாசனங்களையும் அதன் நன்மைகளையும் இங்குப் பார்க்கலாம்.

பத்மாசனம்:

கணுக்கால் மற்றும் முழங்கால்களை ஸ்ட்ரெட்ச் செய்யவும் மூளையின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், முதுகெலும்பை நேராக வைத்துக்கொள்ள உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் அசவுகரியத்தைக் குறைக்க உதவுகிறது.

வஜ்ராசனம்

செரிமான அமிலத்தன்மை மற்றும் வாயு உருவாகுவதை சரிசெய்கிறது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும். தொடை தசை மற்றும் பாலியல் உறுப்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், சிறுநீரக தொற்று சிகிச்சைக்கும் உதவுகிறது.

கோமுகாசனம்

இடுப்பு மற்றும் கீழ் முதுகு வலியை சரிசெய்ய உதவுகிறது. நெஞ்சுப்பகுதியை விரிவடைய உதவும். கைகளை வலுவாக்க இந்த ஆசனம் மிகவும் சிறந்தது.

வீரபாதராசனம்

பின் முதுகுப்பகுதி, கை கால், கணுக்கால், தோள்பட்டை, தொடைப்பகுதி ஆகியவற்றை வலுவாக்கும். மன அழுத்தத்தைக் குறைத்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

சக்ராசனம்

நெஞ்சுப்பகுதியை விரிவாக்கி, போதுமான அளவு ஆக்சிஜனை நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவும். உடலின் ஸ்ட்ரெஸ் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. கண்பார்வையைக் கூர்மைப்படுத்துகிறது. அதேபோல முதுகெலும்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ramya pandian latest photoshoot yoga and benefits tamil news

Next Story
கோதுமை சப்பாத்தியை போன்றே ஆரோக்கியமான ஓட்ஸ் சப்பாத்தி… செய்வது எப்படி?OATS ROTI Recipe in tamil: how to make OATS CHAPATI in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express