/tamil-ie/media/media_files/uploads/2020/09/rasam-idli-tamil.jpg)
Rasam Idli Recipe In Tamil
Rasam Idli Recipe In Tamil, Rasam Idli Making Video: இட்லி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட தோதான ஒரு உணவு. உடல் நலத்திற்கு தீங்கு இல்லாத ஒரு எளிய உணவும்கூட! அந்த இட்லியுடன் சாம்பார் சேர்த்து சாம்பார் இட்லி சாப்பிட்டிருப்பீர்கள். ரசம் இட்லி சாப்பிட்டது உண்டா?
ரசம் இட்லி சுவையானதும், உடல் நலத்திற்கு நன்மை பயப்பதும் ஆகும். வீட்டில் செய்வதற்கு எளிமையானதும்கூட! ரசம் இட்லி எப்படி செய்வது? என்பதை இங்கு காணலாம்.
Rasam Idli Making Video: ரசம் இட்லி
ரசம் இட்லி செய்யத் தேவையான பொருட்கள்: இட்லி - 5, ரசம் வைக்க : தனியா - 1 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - 6,
துவரம்பருப்பு - 1 டீ ஸ்பூன், கடலை பருப்பு - 1/2 டீ ஸ்பூன், சீரகம் - சிறிதளவு, தக்காளி - 1/2 கப், புளி தண்ணீர் - 1/4 கப், மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை, பெருங்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி தழை - சிறிதளவு
ரசம் இட்லி செய்முறை : முதலில் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் ஆகியவற்றை கடாயில் வறுத்து ஆற வையுங்கள். பின் மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொள்ளவும்.
தக்காளியை கைகளால் நன்றாக மசித்து அதனுடன் புளித் தண்ணீர் சேர்த்து பொடியாக்கி வைத்துள்ள ரசப் பொடி, உப்பு சேர்த்து கலக்குங்கள். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்த பின்னர் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு பெருங்காயப் பொடி சேர்த்து, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்து அதை கலக்கி வைத்துள்ள ரசத்தில் ஊற்றுங்கள்.
இதன்பிறகு அடுப்பில் ரசக் கலவையை வைத்து சிறு தீயில் வையுங்கள். கொதிநிலை வந்ததும் இறக்கிவிடுங்கள். இப்போது ரசம் தயார். இட்லியை பறிமாறும்போது அதன் மேல் ரசம் ஊற்றி, சிறிது கொத்தமல்லி, காராபூந்தி தூவி கொடுங்கள். சுவையானதாகவும், சத்தானதாகவும் இருக்கும் இந்த ரசம் இட்லி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.