சளி பறந்து போகும்: பாதுகாப்பை உறுதி செய்ய, இதுதான் பெஸ்ட்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு

rasam recipe in tamil millagu rasam
rasam recipe in tamil millagu rasam

Rasam recipe in tamil, millagu rasam: நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தென்னிந்திய உணவு வகைகளில் ராசம் ஒரு முக்கிய உணவு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஜீரணத்திற்காக மட்டும் இந்த ரசத்தை கடைசியாக சாப்பிடுவது இல்லை.

ரசத்திற்கு உபயோகிக்கும் மிளகிற்கு விஷத்தை முறிக்கும் சக்தி உள்ளது. நாம் உண்ணும் உணவில் ஏதாவது உபாதை ஏற்படுவதாக இருந்தாலும் இந்த மிளகு அதை சரி செய்து விடுகிறது. இதனாலே நம் முன்னோர்கள் கடைசியாக மிளகு ரசம் சாப்பிடுமாறு கூறியுள்ளார்கள்.

rasam making in tamil தேவையான பொருட்கள்:

புளி கரைச்சல், தக்காளி, கறிவேப்பிலை, கருப்பு மிளகுத்தூள்- 1-2 தேக்கரண்டி, பூண்டு- 4-5 பல்
சிவப்பு மிளகாய்- 3, சீரகம்- 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள்- அரை தேக்கரண்டி, கொத்தமல்லி இலைகள்- 1 தேக்கரண்டி
உப்பு- சுவைக்க மஞ்சள்- அரை தேக்கரண்டி, கடுகு- 1 தேக்கரண்டி, எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை:

2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும்.கரடுமுரடாக அவற்றை மிக்சியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடு பண்ணவும்.நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.

அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும், தீயைக் குறைக்கவும்.

கடாயை மூடி வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.இன்னொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.

அதில், கடுகு, சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பின்னர் இந்த வறுத்த பொருட்களை, கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும்.

அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி சேர்த்து, பரிமாறவும். தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்க்கலாம்.இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது.

கலக்குறாங்கப்பா… எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் இனி பேங்க் போக வேண்டிய அவசியமே இல்லை!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasam recipe in tamil millagu rasam in tamil rasam making in tamil

Next Story
முடி வளர என்னென்னவோ செஞ்சிருக்கோம், இத கவனிக்கலையே…Hair Care Tips, Wooden Comb can Improve hair growth
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com