Rasam Recipe News In Tamil, Nagercoil Rasa Vadai Tamil Video: நாகர்கோவில் பக்கம் ஒரு டிபன் கடையில் காலையில் போய் உட்கார்ந்தால், ‘என்ன வேண்டும்?’ என்றே முதலில் கேட்கமாட்டார்கள். ஒரு பாத்திரத்தில் இருந்து ரச வடை ஒன்றை கரண்டியால் எடுத்து உங்கள் இலையில் வைத்துவிடுவார்கள். அதன்பிறகே உங்களுக்கு இட்லி தேவையா, தோசை அல்லது பூரி தேவையா? என்கிற கேள்வியே!
Advertisment
கடைகளில் மட்டுமல்ல, நாஞ்சில் நாட்டின் பெரும்பாலான வீடுகளிலும் தவிர்க்க இயலாத ஒரு உணவுப் பொருள் ரச வடை. ரசம் எந்த அளவுக்கு நமது உடலுக்கு நன்மை பயக்கும் என்பது நாம் அறிந்ததே! எனவே ரச வடையின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
Nagercoil Rasa Vadai Tamil Video: நாஞ்சில் நாட்டு ரச வடை
நாஞ்சில் நாட்டு ரச வடை செய்யும் முறையைப் பார்க்கலாம். சாதாரணமாக நாம் ரசம் தயாரிப்பதற்கும், ரச வடைக்கான ரசத்திற்கும் வித்தியாசம் உண்டு. கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், வெள்ளைப்பூண்டு, சீரகம் ஆகியவற்றை லேசாக மசித்து புளி தண்ணீரில் போட்டு சூடாக்க வேண்டும். அது கொதிக்கும் முன் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால், ரச வடைக்கான ரசம் தயார். இந்த ரசத்தில் மிளகு, தக்காளி சேர்ப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
அடுத்து வடை தயாரிக்க, பட்டாணி பருப்பையே பயன்படுத்த வேண்டும். பட்டாணி பருப்பு மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதளவு சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்தால், வடை தயார். அதை ரசம் நிரம்பிய பாத்திரத்தில் போட்டு ஊற விட்டால், சுவையான நாஞ்சில் நாட்டு ரச வடை தயார். வடையில் உப்பு சேர்ப்பதால் ரசத்தில் பாதி உப்பு சேர்த்தால் போதுமானது.
ஒருமுறை ரச வடை செய்து பார்த்தீர்கள் என்றால், அதற்கு அடிமை ஆகிவிடுவீர்கள். மழை காலத்தில் இந்த ரச வடை அற்புத உணவுப் பொருளாக அமையும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"