Advertisment

குழந்தைகளும் விரும்பும் பருப்பு ரசம்: சிம்பிளான செய்முறை

paruppu rasam making tamil video: ரசத்தை விதவிதமாக வைப்பதுதான், குடும்பத்தினரை தொடர்ந்து ரசத்தை விரும்பச் செய்யும். அந்த வகையில் பருப்பு ரசம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குழந்தைகளும் விரும்பும் பருப்பு ரசம்: சிம்பிளான செய்முறை

Rasam Recipe, Paruppu Rasam Making Tamil Video: நம் உணவு நடைமுறைகளில் ரசத்திற்கு முக்கியப் பங்கு உண்டு, செய்வதற்கு எளிமையானது. செலவு குறைவு. குழந்தைகள் உள்பட அனைவருக்கும் பிடித்தமானது. உடலுக்கும் நல்லது. எனவேதான் அடிக்கடி வீட்டில் ரசம் வைக்கிறோம். இதில் அலுத்துக்கொள்ள ஒன்றுமில்லை.

Advertisment

ஆனால் அந்த ரசத்தை விதவிதமாக வைப்பதுதான், குடும்பத்தினரை தொடர்ந்து ரசத்தை விரும்பச் செய்யும். அந்த வகையில் பருப்பு ரசம் எப்படி வைப்பது என்பது குறித்து இங்கு காணலாம்.

Paruppu Rasam Making Tamil Video: பருப்பு ரசம்

பருப்பு ரசம் செய்யத் தேவையான பொருட்கள்: தக்காளி - ஒன்று, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பூண்டு - 5 பல், சீரகம் - அரை டீ ஸ்பூன், கடுகு - அரை டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத் தூள் - 2 டீ ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீ ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி இலை- சிறிதளவு, பருப்புத் தண்ணீர் - 100 மில்லி (துவரம் பருப்பு வேக வைத்து வடித்த தண்ணீர்)

பருப்பு ரசம் செய்முறை :

முதலில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாயை பொடித்து கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். தக்காளியை கையில் நன்றாக பிசைந்தோ அல்லது மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றியோ தனியே வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின் தட்டி வைத்துள்ள பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியுடன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை சிறிதளவு சேர்த்து தாளிக்கவும்.

அதில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் லேசாக கொதிக்க விடவேண்டும். பிறகு இதில் பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும். கொதி வரும்போது அடுப்பை அணைத்து, இறுதியில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை ரசத்தின் மேலே தூவ வேண்டும். இப்போது சுவையான பருப்பு ரசம் ரெடி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment