Rasam Recipe Tamil, Mor Rasam Making Tamil Video: வீட்டில் தயிர் மட்டுமே இருக்கிறது என வைத்துக் கொள்வோம். தயிர் சாதம் சாப்பிடும் விருப்பமும் இல்லை என்றால் என்ன செய்வது? கவலையே படவேண்டாம், உங்களுக்கான ரெசிபிதான் மோர் ரசம்!
Advertisment
மோர் ரசம் செய்முறை சிம்பிளானது. அதிக பொருட்கள் தேவையில்லை. அலுவலகம் செல்லும் அவசரத்திலும் குறைந்த பொருட்களைக் கொண்டு மோர் ரசம் செய்துவிடலாம். எப்படி என்று பார்ப்போமா?
Mor Rasam Making Tamil Video: மோர் ரசம்
Advertisment
Advertisements
மோர் ரசம் செய்யத் தேவையான பொருட்கள் வருமாறு: புளித்த தயிர் - அரை கப், தண்ணீர் - 2 கப், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - 1 டீ ஸ்பூன், சீரகம் - அரை டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கருவேப்பிலை - தேவையான அளவு, பெருங்காயத் தூள் - ஒரு ஸ்பூன், எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
அரைக்க : வறுக்காத வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் (உரித்தது) - 2, பூண்டு - 2 பற்கள், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன்
மோர் ரசம் செய்முறை:
முதலில் தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ளுங்கள். அரைக்க வேண்டிய பொருட்களை தேவையான அளவு தண்ணீர் விட்டு, பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தயிரில் கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள். மோர் ரசம், திக்கான சாம்பார் போல இருப்பது அவசியம். எனவே தண்ணீரை அதற்கேற்ப கலந்து கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு அவற்றை தயிரில் சேருங்கள். இப்போது மோர் ரசம் ரெடி. சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பு இதைச் செய்து வைத்தால், தாளித்தவை எல்லாம் இறங்கி ரசம் சாப்பிட சூப்பராக இருக்கும்.
சாதத்துடன் சேர்த்து சாப்பிட மோர் ரசம் மிகவும் சுவையானதாக இருக்கும். குறிப்பாக ரசம் அயிட்டங்களையே விரும்பாத குழந்தைங்க, மோர் ரசத்தை சப்பு கொட்டுவாங்க!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"