Rasam Recipe Tamil News, Chettinadu Rasam Making Tamil Video: நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். உணவுச் சமநிலையைப் பேணவும், உடல் நலத்தை பாதுகாப்பதிலும் இதற்கு அளப்பரிய பங்கு இருக்கிறது. எனவே தினமும் இல்லாவிட்டாலும், வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் உணவுடன் ரசம் எடுத்துக்கொள்ள தவற வேண்டாம்.
Advertisment
உணவு சமையலில், செட்டி நாடு சமையலுக்கு தனி மவுசு இருக்கிறது. அந்த வகையில் செட்டிநாடு ரசம் எப்படிச் செய்கிறார்கள் என்பதை இங்கு காணலாம்.
Chettinadu Rasam Making Tamil Video: செட்டிநாடு ரசம்
செட்டிநாடு ரசம் செய்ய தேவையான பொருட்கள்: தனியா – 2 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 3/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கடுகு – 1/4 ஸ்பூன், தக்காளி – 1, நெய் – சிறிதளவு, புளி – சிறிது, கொத்தமல்லி இலை– சிறிதளவு, எண்ணெய் – தேவைக்கேற்ப, உப்பு – தேவைக்கேற்ப
Advertisment
Advertisements
செட்டிநாடு ரசம் செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, சீரகம், உளுந்தம் பருப்பு சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும் . அதேபோல கடாயில் நெய் ஊற்றி சீரகம், கடுகு போட்டுத் தாளித்து தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சள் தூள், புளிக் கரைசல், உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றுடன் அரைத்த பொடியையும் சேர்த்துக் கிளறி விடுங்கள்.
அடுப்பில் சிறிது கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு ரசம் ரெடி. சுவையானதாகவும், உடலுக்கு நலம் பயப்பதாகவும் உள்ள இந்த ரசத்தை மிஸ் பண்ண வேண்டாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"