Rasam Recipe Tamil : ரசம் எலுமிச்சை ரசம் இன்ஸ்டன்ட் ரசம் தென்னிந்திய உணவு வகைகளில் ரசம் இல்லாமல் நிச்சயம் அந்த உணவு வகை நிறைவு பெறாது. அதிலும் ரசத்திற்கு பிரத்தியேகமாக உபயோகிக்கும் ரசப்பொடி இல்லாமலே சுவையான ரசம் செய்யலாம் என்றால் நம்ப முடிகிறதா? உங்கள் சமையலறையில் உள்ள 5 அடிப்படை பொருள்கள் போதும். சுவையான ரசம் நொடியில் ரெடி.
தேவையான பொருட்கள்
தக்காளி (தோராயமாக நறுக்கப்பட்டது) - 1
வேக வைத்த துவரம் பருப்பு - 1/4 கப்
15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் நனைக்கப்பட்ட எலுமிச்சை - 1
சாம்பார் தூள் - 1 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
சூடான வாணலியில் மிதமான தீயில் முதலில் எலுமிச்சை தண்ணீரைச் சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளி, வேகவைத்துப் பிசைந்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்.
இந்தக் கலவையை சுமார் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். நீங்கள் விரும்பினால் அதில் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளலாம்.
அவ்வளவுதான்.. வித்தியாசமான ரசம் தயார். இதனை சூடான சாதத்தோடு சேர்த்துப் பரிமாறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"