/tamil-ie/media/media_files/uploads/2019/12/a676.jpg)
ratchasan villain christopher sarvanan naan cute family - ராட்சசன் படத்தில் நடுங்க வைத்த 'கிறிஸ்டோபர்' வில்லனின் அழகான குடும்பம் - மகளின் கியூட் வீடியோ
ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த படம் 'ராட்சசன்'. சமீபத்தில் இப்படத்தின் ஓராண்டு நிறைவை ரசிகர்கள் சமூக தளங்களில் கொண்டாடித் தீர்த்தனர். கடந்த 30 ஆண்டுகளில், இப்படியொரு மிரட்டலான சைக்கோ த்ரில்லர் படம் தென்னிந்திய சினிமாவில் கூட எடுக்கப்படவில்லை எனலாம். தெலுங்கில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றிப் பெற்றது.
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
ராட்சசன் படத்தின் பெயருக்கேற்ப, நிஜ ராட்சசனாக மிரட்டியவர் அப்படத்தின் வில்லன் சரவணன். இப்படம் ரிலீசாகும் வரை, யார் என்றே தெரியாமல் இருந்த சரவணன், படம் ரிலீஸாகி மக்களை ஏகத்துக்கும் மிரட்டிய பிறகும் கூட யாரென்று தெரியாமலேயே இருந்தார்.
Box Office Collection 2019: பாக்ஸ் ஆபிஸில் யாரு கிங்? - அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்ட்!
காரணம், அவர் நடித்த தோற்றம் அப்படி. ஒரு ஆங்லோ இந்திய பெண்ணாக நடித்து ஆடியன்ஸை பயத்தால் தெறித்து ஓட வைத்தார்.
மேடையில் பாடிய அஜித் மகள் அனோஷ்கா - தல ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா!! (வீடியோ)
இதனால், யார் இந்த வில்லன்? என்று தெரியாமலேயே இருந்தது. பிறகு, படக்குழு இதற்கென்றே ஒரு தனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, ரியல் ராட்சசன் யார்? என்பதை அடையாளப்படுத்தியது.
உலகமே அப்போது தான் இப்படி ஒருவர் இருக்கிறாரா? என்று பார்த்தது. பார்த்தது மட்டுமின்றி, இவரா அந்த டெரர் லேடியாக நடித்தது என்று சற்றே யோசிக்கும் அளவுக்கு அமைதியாக சாந்தமாக தோற்றமளித்தார்.
இந்திய சினிமாவில் சைக்கோ த்ரில்லர் வகையறாக்களில், டாப் 10ல் அசையா சொத்தாக இடம்பிடித்திருக்கும் ராட்சசன் படத்தின் சொத்து ராம்குமாரின் அழகான குடும்பம்,
மகளுடன் சரவணன்
மனைவியுடன் சரவணன்,
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்
அடுத்தடுத்து பல படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனது தடத்தை அழுத்தமாய் பதிக்க சரவணனுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துகள்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.