ரத சப்தமி வழிபாடு குறித்து விளக்கமாக அனிதா குப்புசாமி வீடியோவில் பேசி உள்ளார்.
அவர் தெரிவித்த தகவல் “ ரத சப்தமி வழிபாடு பாரத தேசத்தில் முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடத்தில் இரண்டு காலம் வரும். ஆடி மாதத்தில் தக்ஷானாயனம் காலம் வரும். தை மாதத்தில் உத்ராணனயம் காலம் வரும். தக்ஷானாயன காலத்தில் சூரியன் தெற்கு நோக்கி பயனம் செய்வார். உத்ராணானய காலத்தில் சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்வார். சூரியன் வடகிழக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிகின்றார். வடக்கு நோக்கிய் பயணம் செய்யும்போது மக்களின் வாழ்வு சுபிக்ஷமாக இருக்கும். சூரியந்தான் பிரதானமாக இருக்கின்றார். நாம் சாப்பாடு சாப்பிடுகிறோம் என்றால் அவரால்தான். பஞ்ச பூதங்களில் சூரியனுக்கு மட்டும்தான் பகவான் என்று சொல்லி வழிபடுகிறோம். விஷ்ணுவாகவும், சிவனாகவும் சூரியன் இருக்கிறார். ரத சப்தமி நாளில்தான் சூரிய பகவான் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ரத சப்தபி நாள் அன்று ஆண்களும், பெண்களும் அதிகாலையில் எழுந்து குறித்த முகூர்த்தத்தில் குளிக்க வேண்டும். எருக்கன் இலைகளை 7 எடுத்து கொண்டு அதை தலைமேல் வைத்து, ஆண்கள் அதற்கு மேலாக பச்சரிசி, எள், விபூதி வைத்துகொள்ள வேண்டும். இதுவே பெண்கள் எருக்கன் இலைக்கு மேலாக பச்சரிசி, எள், மஞ்சள் பொடி வைத்து குளிக்க வேண்டும்.
அப்படி குளிக்கும்போது, ஓம் சூரியாய நமக, ஓம் ஆதித்யாய நமக என்று சொல்ல வேண்டும். முன் ஜென்ம பாவங்கள் மற்றும் தற்போது நாம் தெரிந்து மற்றும் தெரியாமல் செய்யும் பாவங்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். குழாய் தண்ணீரில், எள்ளு, மஞ்சள் பொடியை அப்படியே விட்டுவிடுங்கள். எருக்கன் இலைகளை செடிக்கு கீழே போடுங்கள். அது மக்கிவிடும்.
இப்படி குளிப்பதால் உடலில் இருக்கும், உபாதைகள் போய்விடும். அகத்திலும் புறத்திலும் இருக்கக்கூடிய உபாதைகள் போய்விடும். இந்நிலையில் இதற்கு காரணம் உண்டு என்று அவர் சொல்கிறார்.
பீஷ்மர் முள்ளு படுக்கையில் படுத்திருந்தார். அப்போது அவருக்கு உயிர் போகவில்லை. அவர் சாக வேண்டும் என்று நினைக்கிறார். வேத வியாசர் அப்போது வருகிறார். அவரிடம் உயிர் போகவில்லை நான் என்ன பாவம் செய்தேன் என்று பீஷ்மர் கேட்கிறார். நீங்கள் தவறு செய்யவில்லை என்று நினைத்துகொண்டு இருக்கிறீர்கள். ஆனால் தப்பை தட்டிக் கேட்காமல் இருந்துள்ளீர்கள் என்று வியாசர் சொல்கிறார்.
திரௌபதி துயில் உரிக்கப்படும்போது அதை பார்த்து தட்டிக்கேட்வில்லை. அதை செய்தவரை கொலை செய்யவில்லை. இதனால் பாவம் செய்துள்ளீர்கள். இதிலிருந்து தப்பிக்க சூரியனை பிழிந்து உங்களிடம் நான் கொடுக்க வேண்டும். எருக்கன் இலைதான் சூரியனை பிழிந்து வைத்துள்ளது. அதை உங்கள் படுக்கையில் அடுக்குகிறேன். இதைத்தொடர்ந்து பீஷ்மர் உயிர் நல்ல முறையில் முக்தி பெருகிறது.
இந்த காரணத்தினால் நாம் இந்த நாளில் எருக்கன் இலையை வைத்து குளிக்க வேண்டும். இதுபோல பீஷ்மருக்கு நாம் அடுத்த நாளில் தர்பணம் கொடுக்கலாம். இதனல் நாம் செய்த பாவம் நீங்கும்.
பிப்ரவரி 16 காலை 5.17 முதல் 6.59 மணி நேரத்திற்குள் குளிக்க வேண்டும். இடைத்தொடர்ந்து சூரியனுக்கு, தண்ணீர் இரைத்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து சூரிய ஒளி வரும் இடத்தை தேர்வு செய்து, அதை சுத்தம் செய்து. சூரிய முக வடிவத்தை வரைந்து, அதற்கு அருகே நெய் வைத்தியம் வைக்க வேண்டும். இதை சூரியனுக்கு படைக்க வேண்டும். சைவாமாக உணவு இருக்கட்டும். இதைத் தொடர்ந்து மந்திரம் சொல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து தான, தர்மம் செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.