பல ஆயிரம் ரூபாய்க்கள் கொடுத்து பட்டு சேலை வாங்கி, வருஷத்தில் 3, 4 நாள் கட்டிவிட்டு, பிறகு அதை பீரோவில் வைத்து பராமரிப்பதற்கு சிரமப்படும் பெண்களுக்கு, ரேஷன் கடை வேஷ்டியை வைத்து பட்டுச் சேலைகளை பாதுகாக்க பளிச் யோசனையை இங்கே தருகிறோம்.
பெண்களுக்கு விலை உயர்ந்த பட்டு சேலையின் மீது மிகப் பெரிய விருப்பம் இருக்கும். அதிக விலையில் வாங்கப்படும் பட்டுச் சேலைகளை அவர்கள் வருடத்திற்கு 3,4 முறை கட்டினால் பெரிய விஷயம். அதுவும் விசேஷங்களுக்குதான் கட்டுவார்கள். மற்ற நாட்களில் அந்த விலை உயர்ந்த பட்டுச் சேலைகள் பீரோவில்தான் இருக்கும். அவற்றை பராமரிப்பது கொஞ்சம் சிரமம்தான். மற்ற துணிகளை எடுக்கும்போது, கைப்பட்டு பட்டுச் சேலைகள் கலைந்துவிடும், அவற்றை மீண்டும் மடித்து வைக்க வேண்டும். அப்படியே வைத்துவிட்டாலும், சில மாதங்களில், ஒரு மக்கிய வாசனை, பழுப்பு நிறம் இருக்கும். அதனால், பட்டுச் சேலைகளை பாதுகாக்க பளிச் யோசனை தருகிறோம்.
நெசவாளர்களை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கைத்தறி, வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. கடந்த பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்கப்பட்டது. அவற்றை மிகவும் குறைவாகவே வீடுகளில் அணிகிறார்கள். பெரும்பாலும் சும்மாவே இருக்கிறது. அதனால், இந்த ரேஷன் கடை வேட்டி, சேலையை வைத்து என்ன செய்யலாம் என்று சில டிப்ஸ்களை இங்கே தருகிறோம்.
ரேஷன் கடை வேட்டியை வைத்து, பட்டுச் சேலைகளை பாதுகாக்க பளிச் யோசனை தருகிறோம்.
முதலில் ரேஷன் கடை வேட்டியை எடுத்து சரிபாதியாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது ஒரு பகுதியை நீள வாக்கில் மடியுங்கள். ஒரு கை அளவு மடித்து விடுங்கள். பிறகு, உங்களிடம் இருக்கும் பட்டு சேலையை வைத்து, அதன் மீது மறு முனையில் இருக்கும் வேட்டியின் பகுதியை எடுத்து மூடுங்கள், பிறகு மீண்டும் ஒரு பட்டு சேலையை வைத்து, மீண்டும் மீதம் இருக்கும் வேட்டியின் பகுதியால் மூடலாம், பிறகு மீண்டும் ஒரு பட்டு சேலையை வைத்து மூடலாம். இப்படி ஒரு காம்பாக்டாக பட்டு சேலையை மூடி கலையாமல் பாதுகாப்பாக வைக்கலாம்.
கட் பண்ணி வைத்திருக்கிற மறு பாதி வேட்டியை, அரிசி போன்ற தானியங்களைக் கொட்டி உலர்த்த பயன்படுத்தலாம். கேஸ் ஸ்டவ் போன்றவற்றை துடைக்க பயன்படுத்தலாம்.
அதே போல, ரேஷன் கடை சேலையில், உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், தொட்டில் கட்டலாம். ரேஷன் கடை வேட்டி, சேலையைக் கட்டாதவர்கள், அவற்றை இப்படி பயன்படுத்தலாம்.