ரேஷன் கடை பருப்பில், நாம் முருங்கைக்கீரை பருப்பு வடை செய்ய முடியும். இப்படி செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
ராஷன் கடை பருப்பு – 3 டம்ளர்
4 பல்லு பூண்டு
3 துண்டு இஞ்சி
3 பச்சை மிளகாய்
2 வர மிளகாய்
1 ஸ்பூன் சோம்பு
4 பட்டை
2 வெங்காயம்
1 கை நிறைய கொத்தமல்லி இலை
1 கொத்து கருவேப்பிலை
1 கப் முருங்கைக்கீரை
அரை ஸ்பூன் சீரகம்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: முதலில் நான் ரேஷன் கடை பருப்பை 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து இத்துடன் பூண்டு, இஞ்சி, மிளகாய், வத்தல் , சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதை ஒரு பாத்திரத்தில் இதை சேர்த்து அத்துடன் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து கிளரவும். தொடர்ந்து வட்டமாக தட்டி எண்ணெய்யில் சேர்த்து பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“