Rava cake, Tamil rava cake recipe : மாலையில் ஏதாவது கொறிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டாலோ, திடீரென உறவினர்கள் வந்துவிட்டாலோ என்ன செய்வது என யோசிக்கும் உங்களுக்கு இந்த எளிமையான ரவை கேக் கைக்கொடுக்கலாம்.
Advertisment
வீட்டிலேயே கேக் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் நம் எல்லோருக்கும் இருக்கும். பேக்கிங் அவன் இல்லாமல், சோடா உப்பு, சோடா பவுடர், முட்டை எதுவுமே இல்லாமல் சுலபமான முறையில், ஒரு கப் ரவையை வைத்து நம் வீட்டிலேயே, சுவையான பஞ்சு போன்ற கேக்கை செய்யலாம். பஞ்சுபோல் லாவகமாக சாப்பிட ரவை கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
rava cake recipe செய்முறை!
முதலில், ஒரு கிண்ணத்தில் உருக்கிய வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, தயிர், பால், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் ரவை, மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
0
பின்னர், தயாராகவுள்ள வெண்ணெய் கலவையை இத்துடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்துக் கொள்ளலாம். தற்போது, 350 டிகிரி எப்ல் சூடு செய்து, பிறகு இந்த கலவையை கேக் பேனில் ஊற்றி சமம் செய்து சுமார் 50 நிமிடங்கள் விட்டு வேகவிடவும்..
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil