Rava dhosa recipe, rava dhosa recipe in tamil : இட்லி, தோசை மாவு இல்லாதபோதும், விருந்தாளிகள் திடீரென வந்தாலும் மிக சுலமாகவும், சுவையாகவும் ரவா தோசை செய்து கொடுத்து அசத்திடலாம் . ஹோட்டலில் ரவா ரோஸ்ட் செய்வது போலவே வீட்டிலேயும் எளிய முறையில் செய்யலாம்.
Advertisment
rava dhosa recipe : தேவைப்படும் பொருட்கள்:
ரவா – ஒரு கப்அரிசி மாவு – கால் கப்தயிர் – கால் கப்உப்பு – ஒரு தேக்கரண்டிதண்ணீர் – 2 1/2 கப்பொடித்த மிளகு – 10மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2மிகப் பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு இன்ச் துண்டுமிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் –
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும். மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.தோசை ஊற்றிய பின் அடுப்பை சிம்மில் வைத்து பொறுமையாக ஊற்றி ஒரு புறம் நன்கு மொறுமொறுவென வெந்த பின் திருப்பி போட வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil