செம்ம சுவையான ரவை தோசை, ஒரு முறை இப்படி பண்ணுங்க.
தேவையான பொருட்கள்
1 கப் ரவை
முக்கால் கப் அரிசி மாவு
முக்கால் கப் மைதா
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் மிளகு
3 பச்சை மிளகாய்
1 துண்டு இஞ்சி
உப்பு
5 கப் அளவு தண்ணீர்
7 ஊறிய மிளகாய்
7 பூண்டு
1 ஸ்பூன் தனியா
அரை ஸ்பூன் பொட்டுக்கடலை
1 கொத்து கருவேப்பிலை
உப்பு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கியது, உப்பு, தண்ணீர் சேர்த்து கிளரவும். இதை தனியாக தொடர்ந்து ஒரு மிக்ஸியில் ஊற வைத்த மிளகாய், பூண்டு, தனியா, பொட்டுக்கடலை, கருவேப்பிலை , உப்பு ஆகியவற்றை அரைத்துகொள்ளவும். தொடர்ந்து தோசை ஊற்றி அதற்கு மேலாக இந்த அரைத்த கலவையை தேய்க்கவும். வழக்கம்போல் தோசை சுட்டு எடுக்கவும்.