rava dosa recipes rava dosa tamil : தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை டிபன். இவை பொதுவாக சாம்பார், தேங்காய் சட்னி, மற்றும் பருப்புப் பொடியுடன் தான் சேர்த்து பரிமாறப்படுகிறது. தோசையில் பல வகை உண்டு. அதில் பிளைன் தோசை, கீ ரோஸ்ட், மசால் தோசை, ரவா தோசை, பன்னீர் தோசை, ஆனியன் தோசை, மற்றும் கல் தோசை மிகவும் பிரபலமானவை.
Advertisment
ஹோட்டலில் ரவா ரோஸ்ட் செய்வது போலவே வீட்டிலேயும் எளிய முறையில் செய்யலாம். இன்று வீட்டில் ரவா ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும். மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.