ரவை, பால் பவுடர் போதும் சூப்பரான ஜாமுன் செய்யலாம். ரொம்ப சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பால் – 300 எம்.எல்
நெய் – ½ டேபிள் ஸ்பூன்
ரவை- ½ கப்
பால் பவுடர் -¼ கப்
உப்பு - ஒரு சிட்டிகை
பேகிங் சோடா - ஒரு சிட்டிகை
3 கப்- தண்ணீர்
1 ½ கப் -சர்க்கரை
குங்குமப் பூ
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் பால் சேர்க்கவும், அதில் நெய் சேர்க்கவும். தொடர்ந்து ரவை சேர்த்து கிளரவும். தொடர்ந்து பால் பவுடர் சேர்க்கவும். உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து கிளரவும். தற்போது இந்த கலவையை தனியாக எடுத்து கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். இதில் நீளமாக ஜாமின் போன் மாவை பிடிக்கவும். இதை தனியாக வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து குங்கும்பப் பூ சேர்த்து கிளரவும். தொடர்ந்து அடுப்பை அணைக்கவும். பாகை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து எண்ணெய்யில் ஜாமின்களை பொறித்து எடுக்கவும். தொடர்ந்து இதை ஜீராவில் சேர்க்கவும். .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil