நீங்கள் சமைப்பதில் புதியவராக இருந்தாலும் சரி, அல்லது புதிய உணவைப் பரிசோதிக்கும் அனுபவமுள்ள சமையல்காரராக இருந்தாலும், சமையல் ஹேக்குகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன. ஏனென்றால், சிறு சிறு பிழை, உங்கள் விருந்தைக் கெடுத்துவிட்டது என்பதை உணரும்போது நீங்கள் மிகவும் வருத்தமடைவர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
Advertisment
எனவே, சரியான ரவா இட்லி தயாரிக்கவும், உணவில் கருப்பு மிளகு மற்றும் கிராம்புகளை கருகாமல், சரியாகவும் பாதுகாப்பாகவும் சேர்க்கவும், மிகவும் சுவையான, அதிக உப்பு இல்லாத ஒரு சுவையான சீஸ் டிஷ் தயார் செய்யவும் உதவும் சில எளிதான சமையல் ஹேக்குகளை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
சரியான ரவா இட்லி செய்வதற்கான குறிப்புகள்
இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய சேகர் சந்திரா, ஜூனியர் சோஸ் செஃப்: ஹில்டன் கார்டன் இன் நியூ டெல்லி/சாகேத், சரியான ரவா இட்லிகளை தயார் செய்ய கீழே உள்ள குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
மைய அரைத்த ரவை (also known as fine rava or sooji) பயன்படுத்தவும், இதனால் மாவு மென்மையான பதத்தில் வரும். கொரகொர ரவை வேண்டாம்.
மாவு தயாரிக்க, புதிய மற்றும் கெட்டியான தயிரை பயன்படுத்தவும். தயிர் மாவுக்கு ஒரு புளிப்பு சுவையை சேர்க்கிறது மற்றும் நொதித்தல் செயல்முறைக்கு உதவுகிறது.
மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற இட்லிகளைப் பெற, மாவை குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை புளிக்க வைக்கவும். விரைவாக புளிக்க வைக்க நீங்கள் பேக்கிங் சோடாவை மாவில் சேர்க்கலாம். உப்பு மற்றும் சுவையை அதிகரிக்க துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போன்ற மசாலாப் பொருட்களை சேர்க்கவும்.
மாவு கன்சிஸ்டென்சிக்கு வரும்வரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். மாவு திக் ஆகவும், அதேநேரம் ஊற்றக்கூடியதாக இருக்க வேண்டும். கூடுதல் சுவைக்காக, வேகவைக்கும் முன் மாவில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும். இட்லிகள் ஒட்டாமல் இருக்க மாவை ஊற்றுவதற்கு முன், இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவவும்.
மிளகு மற்றும் கிராம்பு சேர்க்க
சந்திரா பகிர்ந்துள்ளபடி, சூடான எண்ணெயில் கருப்பு மிளகு மற்றும் கிராம்புகளைச் சேர்க்கும்போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் கீழே உள்ளன.
எண்ணெய் மிகவும் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் மிளகு மற்றும் கிராம்பு கருகி, கசப்பாகிவிடும். மீடியம் ஹீட் தீ பயன்படுத்துவது நல்லது.
மிளகு மற்றும் கிராம்புகளை சரியான நேரத்தில் சேர்க்கவும், ஏனெனில் அவற்றை சீக்கிரம் சேர்ப்பதால் அவை கருகிவிடும், மேலும் தாமதமாகச் சேர்ப்பது அவற்றின் சுவைகள் முழுமையாக வராமல் தடுக்கலாம். மிளகு மற்றும் கிராம்பின் ஃபிளேவர் எண்ணெயில் சேர்ந்ததும், அவற்றை வெளியே எடுத்துவிடவும்.
சுவைகள் சமச்சீராக இருப்பதையும், அதிகமாக இல்லை என்பதையும் உறுதிசெய்ய இந்த காரணிகளை மனதில் வைத்திருப்பது முக்கியம்.
உணவில் சீஸ் சேர்க்கும் போது
கிரேட்டர் நொய்டாவின் கிரௌன் பிளாசாவின் எக்ஸிகியூட்டிவ் செஃப் சவுரப் சிங் சாண்டல் கூறுகையில் ஒரு சீஸ் ரெசிபியில், உப்பு சேர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சீஸ் இயற்கையாகவே உப்புத்தன்மை கொண்டது. இது ஒரு உணவுக்கு கணிசமான அளவு உப்பு சுவையை வழங்குகிறது.
இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, கூடுதல் உப்பைச் சேர்ப்பதற்கு முன்பு உணவைச் சுவைத்து பார்ப்பது நல்லது.
சீஸ் சமைக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன, அவற்றை சிங் பகிர்ந்து கொண்டார்:
உங்கள் உணவுக்கு சரியான சீஸ் வகையைத் தேர்வு செய்யவும். வெவ்வேறு சீஸ், தனித்துவமான சுவைகள், அமைப்பு மற்றும் உருகும் பண்புகளைக் கொண்டுள்ளன.
ரெசிபியின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த சுவையை மேம்படுத்தும் ஒரு சீஸைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, மொஸரெல்லா உருகுவதற்கு சிறந்தது, அதே நேரத்தில் பர்மேசன் ஒரு உப்பு சுவை சேர்க்கிறது.
சீஸின் தரம் நேரடியாக உணவின் சுவை மற்றும் அமைப்பை பாதிக்கிறது. சீஸ் பொதுவாக குளிர்ந்த, உலர்ந்த இடத்தில், தனியாக சேமிக்க வேண்டும்.
இது ஒரு க்ரீஸ் அமைப்பு அல்லது எரிந்த சுவையை ஏற்படுத்தும். உங்கள் உணவில் சீஸ் உருகுவதற்கு அல்லது சேர்ப்பதற்கு பொருத்தமான வெப்பநிலை குறித்த ரெசிபியின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
சீஸ் ஒரு உணவுக்கு செழுமையையும் சுவையையும் சேர்க்கிறது, ஆனால் அது மிகவும் உப்பு அல்லது புளிப்பாக இருக்கும். உங்கள் ரெசிபியில் உள்ள சுவைகளின் ஒட்டுமொத்த சமநிலையைக் கவனியுங்கள், சீஸ் மற்ற பொருட்களை, ஓவர்டேக் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். சுவைத்த பிறகு, தேவைப்பட்டால் சீஸ் அளவை சரிசெய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“