rava idly recipes rava idly recipes in tamil rava recipes
rava idly recipes , rava idly recipes in tamil ,rava recipes : ஒரு நாளின் பொழுது எப்படி அமைகிறது என்பது காலையில் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்து தான் அமைகிறது. காலை உணவில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய பொழுதில் சுறுசுறுப்பாகவும், திடகார்த்தமாகவும் இருக்க முடியும்.
Advertisment
காலை உணவை தவிர்ப்பது அவ்வளவு நல்லதன்று. இது பல விதமான உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். சிலர் அலுவலகத்துக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவைக் கூட சாப்பிடாமல், போகும் வழியில் டீ குடித்து விட்டுச் செல்வார்கள். இது உடலுக்கு மிகமிக கேடு விளைவுக்கும். அல்சர் போன்ற நோய்களும் ஏற்படக் கூடும்.
இன்னும் சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் டயட்டில் இருப்பார்கள். ஆனால், கொழுப்பு மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். டயட்டில் இருப்பவர்களும், உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களும் கூட காலை உணவை தவிர்க்கக் கூடாது. அப்படி என்றால் என்ன செய்யலாம்? உடல் எடை குறைப்புக்கும், டயட்டை மெயின்டேன் செய்வதற்கும் ஏற்ற டிபன் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
rava idly recipes : கோதுமை ரவா இட்லி!
Advertisment
Advertisements
வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர், கேரட் சேர்த்து மிதமான சூட்டில் 2 நிமிடங்கள் வதக்கவும். அடுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் ரவை சேர்த்து நன்றாக வறுத்தெடுத்து இறக்கவும்.
இந்த மசாலா கலவை ஆறியப் பிறகு, தயிர் மற்றும் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், இட்லி தட்டில் எண்ணெய் தடவி ரவை மாவை ஊற்றி இட்லி குக்கரில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும். அவ்ளோதாங்க.. சுவையான கோதுமை ரவா இட்லி சாப்பிட ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil