கல்யாண வீட்டு கேசரி..அந்த டேஸ்ட் வர மறக்காம இத சேருங்க!

ம்ம்ம்ம் மண்டபத்திற்கு வரும் போதே வாசனை ஆளை தூக்கும்

By: Updated: September 9, 2020, 10:29:24 AM

Rava kesari recipe, Rava kesari in tamil : யார் கேட்டாலும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட் ரவா கேசரி. அதிலையும் கல்யாண வீட்டு கேசரி..ம்ம்ம்ம் மண்டபத்திற்கு வரும் போதே வாசனை ஆளை தூக்கும். எப்படி செய்யலாம் தெரியுமா?

rava kesari recipe : ரவா கேசரி!

ரவை – 1 டம்பளர்
சர்க்கரை – 2 டம்பளர்
தண்ணீர் – ஒன்றரை டம்ளர்
நெய் – அரை டம்பளர்
முந்திரிப் பருப்பு – 10
ஏலக்காய் – 4
கேசரி பவுடர் – 1 தேக்கரண்டி
பன்னீர் – 2 தேக்கரண்டி

முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை தூள் செய்து கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே நெய்யில் ரவையைக் கொட்டி நன்றாக வறுக்கவும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் ஊற்றி, கட்டியாகாமல் நன்றாகக் கிளறவும். ரவை நன்றாக வெந்ததும்,சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். கேசரி பவுடரை தண்ணீல் கரைத்து ஊற்றவும், பன்னீரையும் சேர்க்கவும்.

உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் ஊற்றிக் கிளறிக் கொண்டே வரவும். வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காயைச்சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி விடவும். சுவையான ரவா கேசரி தயார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Rava kesari recipe rava kesari in tamil rava kesari recipe tamil rava kesari video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X