rava laddu recipe rava laddu recipe in tamil : பண்டிகை நாட்கள் வந்து விட்டாலே போதும். குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அதிக செலவில்லாத இனிப்பு, காரம் என்றால் பட்ஜெட்டிற்கும் பிரச்சினை இருக்காது நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.
ரவை – 2 கப்,
சர்க்கரை – 1 கப்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
உடைத்த முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்,
நெய் – தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
செய்முறை:
ரவையை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை நன்கு பொடிக்கவும். ரவையை சர்க்கரையுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு முந்திரியை உடைத்து சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
பிறகு ரவை, சர்க்கரையை சிறிது லேசாக வறுக்கவும். அதிகம் சூடு செய்யக் கூடாது. உடனே நெய்யை சூடு செய்து இந்த கலவையில் சேர்த்து, தேங்காய், ஏலக்காயையும் சேர்க்கவும். கலவை சூடாக இருக்கும் போதே சிறிய லட்டுகளாக பிடிக்கவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”