ஆரோக்கியம், சுவை நிறைந்த ரவா புட்டு ரெசிபி இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
ரவை – 1 கப்
தேங்காய் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாத்திரத்தில் ரவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் உப்பு தூவ வேண்டும். தண்ணீர் தெளித்து நன்றாக பிசைய வேண்டும். அதிகம் தண்ணீர் ஊற்றக் கூடாது. உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.
புட்டு குழாய் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் புட்டு குழாயில் ரவை, தேங்காய் என அனைத்தையும் மாற்றி, மாற்றி வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். ஸ்டீமர் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்தும் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். குழாயில் மாவையும், தேங்காயையும் நிரப்பும் போது அழுத்திவிடக்கூடாது. மாவு மற்றும் புட்டு லேயரை 5 முதல் 6 வரை வைத்துக் கொள்ளலாம். இப்போது அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான புட்டு ரெடி. இந்த புட்டை எந்த ரவை வேண்டுமானாலும் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“