செம்ம சுவையான ரவை பாயாசம். ஈசியா செய்யலாம்
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் நெய்
முந்திரி 8
¼ கப் ரவை
அரை கப் தண்ணீர்
400 எம்.எல் பால்
2 முதல் 3 குங்கும்பப் பூ
½ கப் சர்க்கரை
ஏலக்காய் பொடி 1 சிட்டிகை
காய்ச்சிய பால் ¼ கப்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, ,அதில் முந்திரியை வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். இதில் ரவையை சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து இதில் பால் சேர்த்து ரவையை நன்றாக வேக விடவும். 10 நிமிடங்கள் கழித்து சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து குங்குமப் பூ சேர்க்கவும். தொடர்ந்து ஏலக்காய் பொடி சேர்க்கவும். கடைசியாக காய்ச்சிய பால் சேர்க்கவும்.