Rava snack recpies, rava dishes : வீட்டில் இருக்கும் நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் போலவே இருக்கா? அதுவும் மழைக்காலம் என்பதால் அனைவரின் எதிர்பார்ப்பும் ஈவினிங் ஸ்நாக்ஸ் மேல் கட்டாயம் இருக்கும்.என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்புகிறீர்களா? இதோ சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ்.
Advertisment
ரவை இருந்தால் போதும். சுட சுட பொரித்து எடுத்து அப்படியே சாப்பிடலாம்.
rava snack recpies : செய்முறை!
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
Advertisment
Advertisements
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.