Advertisment

இலங்கை மன்னன் ராவணனின் மறுபக்கம் : பெண்ணாசையினால் வீழ்ந்த மாமனிதன்

Ravanan as king : இதிகாசம், வரலாறு போன்றவற்றில் மன்னன் ராவணனை சித்தரித்த விதத்தில் அவரைப் பற்றிய முழு ஆளுமையை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
diwali ramayana, sri lanka, ayodhya, sundayeye, eye 2019, ravana, ramayana, sri lankan civil aviation, sri lankan ozymandias, yudhanjaya wijeratne, yudhanjaya wijeratne science fiction, nebula award yudhanjaya wijeratne

diwali ramayana, sri lanka, ayodhya, sundayeye, eye 2019, ravana, ramayana, sri lankan civil aviation, sri lankan ozymandias, yudhanjaya wijeratne, yudhanjaya wijeratne science fiction, nebula award yudhanjaya wijeratne,, ராமாயணம், இலங்கை, ராவணன்

இதிகாசம், வரலாறு போன்றவற்றில் மன்னன் ராவணனை சித்தரித்த விதத்தில் அவரைப் பற்றிய முழு ஆளுமையை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. ஆனால் ராவணன் திறமையான அரசன் என்றும் அவன் பெண்ணாசையால் வீழ்ந்தான் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் ராவணன் பற்றி முழுமையான தகவல்கள் தேடும் வேட்கை தொடர்கிறது. விக்கிபீடியா காமன்ஸ் எனும் இணையதளம் கடந்த 1920ம் ஆண்டு வெளியிட்ட ராவணன் ஓவியம் அவரது உருவத்தை பிரமாண்டமாக சித்தரித்துள்ளது. எந்தவொரு பிரமாண்டமான ராட்சத எந்திர மனிதர்களை சித்தரிக்க வேண்டுமென்றாலும் 10 தலைகளுடனும், 20 கைகளுடனும் கூடிய ராவணனை கற்பனை செய்து எந்திர மனிதர்களை பற்றிய நாவல்களை கதைகளை ஒருவரால் எழுத முடியும். பள்ளி மாணவ – மாணவியர்களிடம் ராவணனை பற்றி கேட்டால் அவர் சீதையை இலங்ககைக்கு கவர்ந்து சென்றவர் ராமர் அனுமானுடன் சென்று இலங்கையிலிருந்து சீதாவை மீட்டு வந்தார். என்று சொல்வார்கள். அனதை;து தரப்பினரையும் கவர்ந்த கதையாக ராமாயணம் உள்ளது. நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், புத்தகங்கள், பாடல்கள் மற்றும் பாலிவுட் முதல் கோலிவுட் வரை மிகவும் அருமையாக ஜப்பானிய அனிமே~ன் தொழில்நுட்பத்துடன் ராவணன் சரிதை படமாக்கபட்டுள்ளது. ராவணன் அதீதமான பிண்ணனி கொண்ட அரக்ககுணம் நிறைந்த வில்லனாக சீதையை சிறை செய்வதும் அதனால் ராவணன் கெட்டவனாக பொது வெளியில் சித்தரிக்கப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று, ஆனால் இலங்கையில் உள்ள பள்ளி மாணவ – மாணவிகளிடம் “ராவணன் சர்வாதிகாரியா?” என்று கேட்டால் இல்லையென்றே சொல்கிறார்கள் ராவணன் அற்புதமான அரசன் என்றும், பெண்மீதான தவறான முடிவால் வீழ்ந்தான் என்று மட்டுமே சொல்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கிறிஸ்துவுக்கு முன்பு கி.மு.2517ல் இலங்கையை ஆட்சி செய்த மன்னன் ராவணன் என்பதோடில்லாமல் இசை மற்றும் கணிதத்தில் வல்லமை கொண்டவர். நகர வடிவமைப்பில் திறன் படைத்தவர். பிரிட்டனை சேர்ந்த அரசர் ஆர்தருக்கு இணையானவர், வரலாறு படைத்தவர் என்றே குறிப்பிடுகின்றனர் ஆய்வர்கள். மிகப் பெரிய தலைவனாக இதிகாசங்களில் போற்றப்பட்ட ராவணன், இறுதியில் வில்லனாக சித்தரிக்கப்பட்டு மறைந்து போனான் என்பதே உண்மை.

ராமாயண கதையில் வில்லன் கதாப்பாத்திரமான ராவணன் மிதமிஞ்சிய வகையில் அசாதாரண வண்ணங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளான். அவனது 10 தலைகளும் அவனுக்குரிய சாஸ்திரங்கள், வேதங்கள் பற்றிய அறிவையும் வீணை இசைப்பதில் கைதேர்ந்தவனாகவும், நுட்பமான அரசியல் அறிஞனாகவும், முனிவராகவும், பிரம்மாவிடம் தனிவரம் பெற்றவனாகவும் அவனை முன்னிறுத்துவதாக இலங்கையில் உள்ளவர்கள் கருதுகிறார்கள். ராவணனை ஒப்பிடும் போது ராமன் சற்று குறைவாகவே மிளிர்கிறான். ராமன் ஏகபத்தினி விரதன் என்ற ஒன்றைத்தவிர, ராவணனை போல பன்முகத்திறன் கொண்டவன் என்று எங்கும் சொல்லப்பட்வில்லை. ராமாயணத்தை படிக்கும் போது ராவணனின் திறமைகள் படிப்பவர்களை வியப்படைய வைக்கின்றன. தொழில்நுட்பத்தில் அதிக திறன் கொண்ட சாம்ராஜ்யத்தை இலங்கையில் ராவணன் நடத்தியதும், சீதாவை இலங்கைக்கு கவர்ந்து வர முதன் முதலில் வான்ஊர்தியை உருவாக்கியதும் அவனது தனித்திறமையாக இலங்கை மக்களால் கருதப்படுகிறது.; இது குறித்த ஆராய்ச்சியில் பலரும் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக பு~;பக விமானத்தைப் பற்றி ஒன்றுமே கருத்து தெரிவிக்காததை சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் சிங்கள மொழியில் “டண்டு மோனரா யாந்த்ரயா” (மயில் எந்திரம்) என்று சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் உள்ள தொல்லியல் நிறுவனத்தின் புவியியல்துறை பேராசிரியாகள்; இலங்கைவாசிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே வான்ஊர்திகளில் பறந்துள்ளனர் என்றும், அதற்காக அவர்கள் ராவணனுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இலங்ககையில் உள்ள போற்றப்படும் துறவி ஒருவர் ராவணன் ஆட்சி செய்த காலத்தில் அங்கு பெருவாரியான மக்களால் பேசப்படும் மொழியாக “யக்கா” மொழி இருந்ததை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான ஆராய்hச்சிகள் இன்னும் நடைபெற வேண்டுமென்பதே அங்குள்ளவர்களின் விருப்பமாக உள்ளது. ராமாயண காவியத்தை உருவாக்கிய வால்மீகி மிகப்பெரிய மன்னனான ராவணனுக்கு எதிராக வரலாறை திரித்து கூறி அவரை மோசமாக சித்தரித்துள்ளதாக இலங்கை நாட்டினர் கட்டிக்காட்டுகின்றனர். ராவணனை பற்றிய அபூர்வ திறன்களை இதிகாசம் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இந்த நிலைக்கு முந்தைய தலைமுறையின் தீராத எண்ணமான, ராவணனை வில்லனாக சித்தரிக்கும், மனநிலையே காரணம், இலங்கை பள்ளி மாணவர் ஒருவர் ராவணனை பற்றி நாவல் எழுதியது, ஜப்பானிலுள்ள தொழில் நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கண்ட இலங்கை ஆராயச்சியாளர்கள் “ராவணா-1” என்ற செயற்கை கோளை உருவாக்கியது போன்றவை “ராவணன்” என்ற கதாபாத்திரம் அவர்கள் நெஞ்சங்களில் :சிம்மாசனம்” அமைந்திருந்ததையே நமக்கு காட்டுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்ற “ராவண பாலகயா” என்ற அமைப்பும் ராவணனின் புகழ்பாடுகிறது.. உலக நாடுகளால் கண்காணிக்கப்படும் இலங்கையின் இறுதி அடையாளமாக ராவணன் திகழ்கிறான் என்பதே இலங்கiயில் இன்று ராவணனுக்கு கிடைத்த அங்கீகாரம் இருக்கிறது.

தமிழில் : த. வளவன்

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment