அரிசி சாதம்... குக்கரை இவ்ளோ நேரம்தான் ஸ்டவ்ல வைக்கணும்: உணவியல் நிபுணர் தாரிணி
புழுங்கல் அரிசியை சமைக்கும்போது அதன் சத்துகள் நமக்கு முழுமையாக கிடைக்கிறதா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். குக்கரில் அரிசியை வேக வைக்கும்போது நாம் பண்ணும் தவறுகள்? எவ்வளவு நேரம் அரிசியை வேக வைக்க வேண்டும் என்று விளக்குகிறார் உணவியல் நிபுணர் தாரிணி.
புழுங்கல் அரிசியை சமைக்கும்போது அதன் சத்துகள் நமக்கு முழுமையாக கிடைக்கிறதா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். குக்கரில் அரிசியை வேக வைக்கும்போது நாம் பண்ணும் தவறுகள்? எவ்வளவு நேரம் அரிசியை வேக வைக்க வேண்டும் என்று விளக்குகிறார் உணவியல் நிபுணர் தாரிணி.
நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி ஆலையில் அரைத்து அதன் உமியை நீக்கினால் அது பச்சரிசிஎன்பதும் நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் வேகவைத்து வெயிலில் உலர்த்தி பின்னர் உமியை நீக்குவதால் கிடைப்பது புழுங்கல் அரிசி என்பதும் தெரிந்ததே.
Advertisment
நெல்லை வேக வைக்கும் போது அதில் நார்ச்சற்று மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி, பச்சரிசியை விட அதிகம் ஊட்டச்சத்து உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் புழுங்கல் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றும் வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவருக்கும் பச்சரிசியை விட புழுங்கல் அரிசி சிறந்தது என்று கூறப்படுகிறது
இப்படி சிறப்பு வாய்ந்த புழுங்கல் அரிசியை சமைக்கும்போது அதன் சத்துகள் நமக்கு முழுமையாக கிடைக்கிறதா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். குக்கரில் அரிசியை வேக வைக்கும்போது நாம் பண்ணும் தவறுகள்? எவ்வளவு நேரம் அரிசியை வேக வைக்க வேண்டும், புழுங்கல் அரிசியா அல்லது பச்சரியா எது சிறந்தது என்று விளக்குகிறார் உணவியல் நிபுணர் தாரிணி.
பச்சரிசியை எப்படி வேணாலும் சாப்பிடலாம். வடித்தல் முறையிலும் குக்கரில் சமைத்தும் சாப்பிடலாம். எந்த வகையான அரிசியாக இருந்தாலும் குக்கரில் 2 விசில் வரும் வரை அதாவது 7 நிமிடங்களுக்கு மேல் வைக்கக் கூடாது. அப்படி வைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் மங்கிப்போகும் நிலை ஏற்படும் என்கிறார் உணவியர் நிபுணர் தாரிணி.
Advertisment
Advertisements
சரியான அளவு தண்ணீரை சேர்த்து சமைக்க வேண்டும். ஒன்று அல்லடு 2 முறைக்கும் மேல் அரிசியை கழுவ வேண்டாம். அப்படி செய்வதால் அரிசியில் உள்ள சத்துகள் போக வாய்ப்புண்டு. அரிசியை ஊறவைத்தால் அந்த தண்ணீரிலேயே சாதம் வடிக்கலாம். இவ்வாறு செய்வதால் அரிசியில் உள்ள அனைத்து சத்துகளும் கிடைக்கும் என்கிறார் உணவியல் நிபுணர் தாரிணி.