ஒரு முறை பச்சை தக்காளி கறி, இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
பச்சை தக்காளி 4
நல்லெண்ணை 3 ஸ்பூன்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் சீரகம்
4 வரமிளகாய்
பெருங்காயம்
1 கொத்து கருவேப்பிலை
மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
சீரகப் பொடி 1 ஸ்பூன்
மல்லிப் பொடி 1 ½ ஸ்பூன்
உப்பு
கொஞ்சம் வெல்லம்
2 கப் தண்ணீர்
தண்ணீர்
செய்முறை: பச்சை தக்காளியை நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், வரமிளகாய், பெருங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து தக்களியை சேர்த்து கிளரவும். இதில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, சீரகப் பொடி சேர்த்து கிளரவும். உப்பு, வெல்லம் சேர்த்து கிளரவும். தண்ணீர் சேர்த்து கிளரவும். நன்றாக தக்களி வெந்ததும், பச்சை தக்காளி கறி ரெடி.