/tamil-ie/media/media_files/uploads/2022/09/People-eating-2.jpg)
சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் ராயர் மெஸ் (Express Photo)
Chennai Tamil News: சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் ஒரு குறுகிய தெருவில் (Arundale Street), பொங்கல், இட்லி மற்றும் வடைகளுடன் உணவை சுவைப்பதற்கு மக்கள் பொறுமையாக நிற்பதை நம்மால் பார்க்க முடியும்.
அந்த கடையில் உணவுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நாற்காலிகளோ, மேசைகளோ அமைக்கப்பட்டிருக்காது, இருப்பினும் வாடிக்கையாளர்கள் நேரம் கடப்பதை பொறுப்பெடுக்காமல் காத்திருப்பார்கள்.
வாடிக்கையாளர்கள் காத்திருக்கும்போது, ராயர் மெஸ் ஊழியர்கள் அவர்களிடம் காபி அல்லது பால் சாப்பிட விரும்புகிறீர்களா என்று கேட்கிறார்கள், மேலும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க நேர்ந்தால் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் Rayar's Café என அழைக்கப்பட்ட Rayar's Mess, 80 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இது 1935 இல் குட்சேரி சாலையில் (மயிலாப்பூர்) சீனிவாச ராவ் (தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர்) என்பவரால் தொடங்கப்பட்டது.
சீனிவாச ராவுக்குப் பிறகு, அவரது மகன் பத்மநாப ராவுக்கு இந்த கடை கொடுக்கப்பட்டது. பின்னர் பத்மநாபாவின் மகன்களான பி.குமார் (வயது 62), மற்றும் பி.மோகன் (வயது 57) ஆகியோர் இக்கடையை பெற்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Prepartion-1.jpg)
மக்கள் தனது தாத்தாவை ராயர் அல்லது ராவ் என்று அழைப்பார்கள் என்று மோகன் கூறுகிறார். ஆகையால் இக்கடை ராயர் கஃபே என்று அழைக்கப்பட்டது.
“எங்கள் தாத்தா காலத்தில், வாடிக்கையாளர்கள் மணப்பலகையின் மேல் அமர்ந்து வாழை இலையில் உணவு அருந்துவார்கள். 1960-களுக்குப் பிறகு, நாங்கள் ஆறு டேபிள்களை கடையில் வைத்தோம். இப்போது ஒரே நேரத்தில் 16 பேர் உக்காந்து சாப்பிடும் அளவிற்கு எங்கள் கடையில் வசதி அமைத்துள்ளோம், ”என்று மோகன் கூறுகிறார்.
பிரபலமான உணவகத்தை ஒருங்கிணைக்கும் பொழுது, அவர்கள் ஏன் சிறிய இடத்தில் இருந்து செயல்படுகிறார்கள் என்று கேட்டால், மோகன் அவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தங்கள் உணவைத் தயாரிப்பதாகவும், தங்களின் தனித்துவமான விற்பனை யுக்தியே உணவை சூடாக விற்பது தான் என்றும், அதை மாற்ற விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.
"எங்கள் மனம் பரபரப்பான வழக்கத்திற்கு ஏற்றார் போல் மாறிவிட்டது. திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் எத்தனை பேர் வருவார்கள், அடுத்த மூன்று நாட்களில் எண்ணிக்கை எப்படி குறையும், சனி மற்றும் ஞாயிறுகளில் அந்த எண்ணிக்கை எப்படி உச்சத்தை எட்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Prepartion-2.jpg)
இந்த விகிதத்தின் அடிப்படையில் நாங்கள் உணவைத் தயாரிக்கிறோம். விரிவுபடுத்த முயன்றால், அதிக அளவில் தயார் செய்து, அன்றைய தினத்தின் வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்தால், உணவு வீணாகிவிடும். மேலும், எங்களால் அனைவருக்கும் சூடாக பரிமாற முடியாது. ஆகவே, அது எங்கள் தரத்தையும் பாதிக்கும் என்பதனால், எங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் கொடுக்கும் தனிப்பட்ட கவனத்தை இழக்க விரும்பவில்லை, ”என்று மோகன் கூறுகிறார்.
"உணவை சூடாக பரிமாறுவது, கலப்படம் இல்லாமல் பொருட்களை தயாரித்தல், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியாக கவனம் செலுத்துவது ஆகியவையே எங்கள் வியாபாரத்தின் வெற்றிக்கு காரணம் ஆகும்" என்கிறார் மோகன்.
ராயர் மெஸ் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு அதன் செயல்பாட்டைத் தொடங்கி, காலை 10:30 மணி வரை தொடர்ந்து காலை உணவை வழங்குகிறது. இட்லி, பொங்கல், வடை போன்றவை காலையில் கிடைக்கும் முதன்மையான பொருட்கள். மிகவும் விரும்பப்படும் பொருட்களில் ஒன்றான பொங்கல் அந்த நேரத்தில் தீர்ந்துவிடுவதால், வாடிக்கையாளர்கள் காலை 8:30 மணிக்குப் பிறகு அந்த இடத்தை அடைந்தால் ஏமாற்றமடைவார்கள்.
மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ரவா தோசை, அடை, சாதாரண தோசை, போண்டாக்கள் மற்றும் இனிப்புப் பொருள் - ஜாங்கிரி அல்லது குலாப் ஜாமூன், மற்றும் அவர்களின் பிரபலமான காபியுடன் கூடுதலாக கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் வரை மெஸ் செயல்படும்.
ராயரின் மெஸ் ஒரு நாளுக்கு குறைந்தது 100-120 நபர்களுக்கு உணவு வழங்குகிறது. மனப்பலகையில் மக்களுக்கு சேவை செய்வது முதல், உணவு விநியோக திரட்டிகள் மூலம் ஆன்லைன் முன்பதிவுகளை ஏற்றுக்கொள்வது வரை, பல்வேறு விதமான அனுபவங்களை சந்தித்துள்ளனர்.
மக்கள் காலை உணவு அல்லது டிபன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து, தாங்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை ஊழியர்களுக்கு தெரியப்படுத்துவார்கள். மோகனாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி, காகிதத்தில் பொருட்களைக் குறித்து வைத்து, விலையைக் கணக்கிட்டு, வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Rayar-Mess-1.jpg)
சிலர் பணமாக செலுத்துகிறார்கள், சிலர் மொபைல் கட்டண சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். மக்கள் ரூ.10 அல்லது ரூ.20 குறைவு என்று சொன்னாலும், மெஸ் உரிமையாளர்கள் அடுத்த முறை உணவகத்திற்குச் வரும்பொழுது மீதித் தொகையைச் செலுத்தச் சொல்கிறார்கள்.
ராயர் மெஸ் உரிமையாளர்களின் கூற்றுப்படி, அவர்களின் கடை நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்களிடையேயும் பரிக்ஷயம் அடைந்துள்ளது.
எம்.கே.தியாகராஜ பாகவதர், வி.கே.ராமசாமி, தேங்காய் ஸ்ரீனிவாசன், நாகேஷ், சோ ராமசாமி முதல் விவேக், சிவகார்த்திகேயன், சிம்பு, சந்தானம் என அனைவரும் இங்கு வருகை தந்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்வப்னா, ஒரு சனிக்கிழமை காலை மெரினா கடற்கரைக்குச் சென்று தனது நண்பர்கள் மூலம் ராயர் மெஸ் பற்றி அறிந்தார், இங்குள்ள உணவு மற்றும் சேவையின் தரம் தன்னை ஆச்சரியப்படுத்தியது என்று கூறுகிறார்.
“உணவு நன்றாக இருக்கிறது, அது சரியான சொல்லவேண்டும் என்றால் ஜெயின் உணவு போல இருந்தது. வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் கிடைக்கிறது. இந்த இடத்தை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன், தயவுசெய்து வந்து சாப்பிடுங்கள். இங்கு கிடைக்கிற வடைகள் மிகவும் அழகாக மற்றும் சுவையாக இருக்கின்றன, அவை மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கிறது. அவர்கள் குளிர்ச்சியாக எதையும் பரிமாறவில்லை, எல்லாம் சூடாகவும் சுவையாகவும் இருக்கிறது, ”என்று அவர் குறிப்பிடுகிறார்.
30 வயதான மனோஜ் குமார், தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு தனது தந்தை பி.குமாருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். கடை வளருவதற்காக இளைய தலைமுறையினரை மேலும் ஈர்க்கும் வகையில் சில திட்டங்களை வைத்திருப்பதாக கூறுகிறார்.
“என் தாத்தாவின் நண்பர்கள் இந்த மெஸ்ஸைப் பார்ப்பது வழக்கம், பின்னர் அவர்களின் மகன்கள் வந்தார்கள், இப்போது அடுத்த தலைமுறை இந்த கடையை நடத்தி வருகிறது. எனவே இந்த இடத்தை இத்தனை ஆண்டுகளாக இயங்க வைப்பது நாங்கள் மட்டுமல்ல வாடிக்கையாளர்களும் தான். இது ஒரு உரிமையாளர்-வாடிக்கையாளர் உறவை விட மேலானது, இது ஒரு குடும்பம் போன்றது" என்று அவர் கூறுகிறார்.
விரிவாக்கத் திட்டம் குறித்து அவர் கூறுகையில், “எங்களுக்கு ஒரு யோசனை உள்ளது, ஆனால் எங்களின் தரம் எந்த விலையிலும் சமரசம் செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. தற்போதைய தலைமுறையினர் விஷயங்களை விரைவாகவும் புதுமையாகவும் விரும்புகிறார்கள். சூழலை மேம்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள், அதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் அதற்கு சிறிது நேரம் எடுக்கும், அதை அடைய நாங்கள் காத்திருக்கிறோம்", என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.