Reason and treatment for blackness in knees and elbows : 'முழங்கால் மற்றும் முழங்கைகளில் படரும் கருமையால் பலர் தங்களுக்கு விருப்பமான உடைகளை போட முடியாமல், எந்நேரமும் முழு நீளக்கை உள்ள உடைகளைத்தான் போடுவார்கள். உடலின் மற்ற இடங்களைவிட, மூட்டுப் பகுதிகளில் மட்டும் ஏன் நிறம் மாறுகிறது இதனை எப்படி சரிசெய்வது போன்ற கேள்விகள் எழும். இதற்கான காரணம் மற்றும் தீர்வுகளை பார்க்கலாம்.
முதலில் என் இதுபோன்ற கருமை பிரச்னைகள் வருகின்றன என்று தெரிந்துகொண்டால், அதற்கான தீர்வை பெறுவது எளிது. சிகிச்சைகள் மூலம் இதனை 100% சரிசெய்துவிட முடியுமா என்றால், நிச்சயம் முடியாது. ஆனால், அதன் அடர்த்தியைக் குறைக்க முடியும். இந்த நிற மாற்றம் ஏராளமான காரணங்களால் ஏற்படுகின்றன.
உதாரணத்திற்கு, நாற்காலி, சோஃபா போன்றவற்றில் உட்காரும்போதும், மண்டியிட்டு எந்த வேலை செய்யும்போதும் உதாரணத்திற்கு தொழுகை அல்லது பிரார்த்தனை செய்யும்போது, முழங்கை மற்றும் முழங்காலின் செயல்பாடுகள் அதிகம் இருக்கும். இதுபோன்ற அழுத்தங்கள்தான் மூட்டு உராய்வு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கின்றன. இதுவே, அந்தப் பகுதியைக் கருமையாக மாற்றுகிறது.
அதேபோல சிலர், கருமையை நீக்க மூட்டுப் பகுதிகளில் அதிக அழுத்தம் கொடுத்து தேய்த்துக் குளிப்பார்கள். அளவுக்கு மீறித் தேய்த்தால், நிச்சயம் பாதகமான விளைவுகள்தான் ஏற்படும். அதாவது அந்தப் பகுதியை கருமையாக மாற்றும்.
நாம் உட்கொள்ளும் மருந்து வகைகளும் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் (Hyper Pigmentation) பிரச்னைகள்கூட காரணமாக இருக்கலாம்.
தீர்வு
மோர் அல்லது பாலில் சுத்தமான காட்டனை நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்து, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது இதுபோன்று செய்துவரலாம். இதில் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது.
உபயோகித்த, குளிர்ந்த கிரீன் டீ பேகை (Bag), கருமையான இடங்களில் வைத்து 2 நிமிடங்களுக்கு மென்மையாகத் தேய்த்து வந்தால், கருமை நீங்கும். இதை தினமும் இருமுறை செய்யலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil