நீங்கள் ஏன் இன்னும் சிங்கிளாக இருக்கிறீர்கள் என்று தெரியுமா?

Reason for why you are still Single Relationship Tamil News பழைய பிரச்சினைகளை புதியவற்றிற்குள் கொண்டுவருவது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை

Reason for why you are still Single Relationship Tamil News
Reason for why you are still Single Relationship Tamil News

Reason for why you are still Single Relationship Tamil News : எவ்வளவுதான் கடினமாக முயற்சி செய்தும், ‘நாம மட்டும் ஏன் சிங்கிளாகவே இருக்கிறோம்?’ என்கிற கேள்வி நிச்சயம் பல 90’ஸ் கிட்ஸ்களுக்கு இருக்கும். இதற்கான விடை நீங்கள் மட்டும்தான். ஆம், உங்களுக்குள் இருக்கும் சில குணங்கள் மட்டுமே உங்களுக்கான சரியான இணையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து தடுக்கிறது. நீங்கள் ஒரு உறவில் இணையத் தயாராக இருக்கலாம். ஆனால், டேட்டிங் பற்றிய புரிதல் உங்களுக்குள் தவறாக இருக்கலாம். அது உங்களை அறியாமலேயே ஒருவரிடம் அன்போடு பழகுவதைத் தடுக்கும். நீங்கள் ஒருவருடன் டேட்டிங் செய்யக் கடினமாக முயற்சி செய்தாலும் நீங்கள் இன்னும் சிங்கிள் சிங்கமாக இருப்பதற்கான சில காரணங்கள் இங்கே.

உங்களுடைய குறைந்த சுயமரியாதை பிரச்சினைகள் ஒருவரின் அன்பிற்கு நீங்கள் தகுதியற்றவர்களாக உணரலாம். உங்கள் முந்தைய உறவுகளில் நீங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால், அது உங்கள் கடந்த கால விஷயமாக இருந்தாலும், உங்களுக்குள் குற்றவுணர்வு இருந்தால், நிச்சயம் அது நிகழ் காலத்தை பாதிக்கும். உங்களுக்கு ஏற்ற துணைவரை தேர்ந்தெடுப்பதில் எந்தவித குற்ற உணர்வும் இருக்க வேண்டியதில்லை.

எல்லோரும் உங்களுடைய எதிர்பார்ப்பிற்குப் பொருந்த மாட்டார்கள் என்பதால் எப்போதும் அவர்களுடைய பண்புகள் பார்த்துத் தேர்வு செய்வதுதான் புத்திசாலித்தனம். ஒருவர் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்திருந்தால், அவருடைய இணை அதனைப் பூர்த்தி செய்வதில் எடுக்கின்ற முயற்சியில் ஒரு கட்டத்தில் சோர்வடைந்து போகலாம். உங்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது வேறொருவரிடமிருந்தோ அந்த அதிகப்படியான எதிர்பார்ப்புகள் வந்திருந்தாலும், ஆரோக்கியமான சந்தோஷ வாழ்விற்காக அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை விட்டுவிட வேண்டிய நேரம் இது.

உங்கள் கடந்தகால உறவுகளில் நீங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தால், ​​ஒருவரை நம்புவது கடினமாக இருக்கும். கடந்த காலத்தில் உங்கள் நம்பிக்கையை வேறொருவர் முறித்த பிறகு ஒரு புதிய நபரை நம்புவது கடினம்தான். ஒரு நபரை நம்புவதற்கான இயலாமை மிகவும் கடினமாகிறது. இதனால் நீங்கள் வருங்கால உறவுகளை இழக்கிறீர்கள்.

உங்கள் தற்போதைய உறவை உங்கள் கடந்த கால உறவுகளுடன் ஒப்பிட்டு, சூழ்நிலைகளைச் சமாளிப்பது கடினம். முந்தைய சண்டைகள் மற்றும் வாதங்கள் தொடர்ந்துகொண்டே போனால், உங்கள் இணையரை மேலும் கோபப்படுத்தக்கூடும். எல்லாவற்றிற்கும் மேலாக, பழைய பிரச்சினைகளை புதியவற்றிற்குள் கொண்டுவருவது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் மன அல்லது உடல் ரீதியான துயரங்களை நீங்கள் சந்தித்திருந்தால், புதிய நபர்களை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வது மற்றும் அனுமதிப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். அதிர்ச்சிகரமான நிகழ்வுகளிலிருந்து தப்பிப்பது எளிதான காரியம் அல்ல. அதே சம்பவம் மீண்டும் நிகழலாம் என்று நீங்கள் உணரலாம். இதனால் அன்பை நேர்மறையான வழியில் பார்ப்பது மற்றும் புரிந்துகொள்வது கடினம். இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட நல்ல நிபுணரை சந்திப்பதில் தவறெதுவும் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reason for why you are still single relationship tamil news

Next Story
புளித்த தயிர் வேஸ்ட் அல்ல… ரெடிமேட் இட்லி மாவுடன் இதை மட்டும் சேர்த்து கலக்கிப் பாருங்க!Curd recipes in tamil: best ways to Use Sour Curd In Cooking in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com