/indian-express-tamil/media/media_files/2025/09/12/istockphoto-1373284180-612x612-1-2025-09-12-19-35-08.jpg)
வாய் மற்றும் மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுத்து, அதனை வாய்வழியே வெளியேற்றும் இயற்கையான செயல் ‘கொட்டாவி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலில், வாயை அகலமாக திறப்பதுடன், நுரையீரலுக்கும் செவிப்பறைக்கும் விரிவாக மாற்றம் ஏற்படுகிறது. இதே சமயத்தில், சிலர் கை, கால்களை நீட்டி வழுக்குவதை "முறித்தல்" என்று குறிப்பிடுகிறோம்.
பொதுவாக தூக்கம் வருவதற்கு முந்தைய நேரத்தில் அல்லது தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு, மேலும் அதிகமாக உழைத்த பிறகு, அல்லது சலிப்பு, பசி, தூக்கக்குறைவு போன்ற காரணங்களால் கொட்டாவி வரும். இதுமட்டுமல்லாது, மற்றொருவர் கொட்டாவி விடுவதைப் பார்ப்பது, அதைப் பற்றி கேட்பது அல்லது படிப்பது கூட கொட்டாவியைத் தூண்டும். எனவே, கொட்டாவி ஒரு வகையான "தொற்று விளைவாகும் செயல்" என்றும் பார்க்கப்படுகிறது.
கொட்டாவி ஏன் வருகிறது? – விஞ்ஞானம் மற்றும் உளவியல்
கொட்டாவி என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு "தொற்றிக்கொள்ளும்" தன்மை கொண்ட செயலாகும். இதுபோன்று தொற்று விளைவாக ஏற்படும் கொட்டாவி மனிதர்களுடன் மட்டுமல்லாமல், சிம்பன்சிகள், நாய்கள், பூனைகள், பறவைகள், ஊர்வன்கள் போன்ற பல உயிரினங்களிலும் காணப்படுகிறது. இதனைக் கண்காணித்து வந்த ஆய்வாளர்கள், கொட்டாவி தொடர்பான பல்வேறு உளவியல் மற்றும் உயிரியல் காரணங்களை ஆராய்ந்து, அதற்கான விஞ்ஞானச் சாத்தியங்களை விளக்கியுள்ளனர்.
கொட்டாவி என்பது மனிதர்கள் மற்றும் சில உயிரினங்களில் காணப்படும் ஒரு இயற்கையான மற்றும் சிக்கலான உளவியல் செயலாகும். இது மனிதர்களிடையே மட்டுமல்லாது சிம்பன்சி, நாய், பூனை, பறவை, ஊர்வன போன்ற பிற உயிரினங்களிலும் காணப்படுகிறது. கொட்டாவியின் முக்கிய காரணங்களில் ஒன்று நுரையீரலின் நுண்ணறைகள் சுருங்காமல் பாதுகாக்கப்படுவதும், மூளை வெப்பத்தை சீராக்கும் பரப்பியங்கி திரவம் வெளிப்படுவதும் ஆகும்.
இது மூளை குளிர்வதற்கும் உதவுகிறது. மேலும், அதிக எச்சரிக்கையான மனநிலையிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் ஒரு உடல் மொழியாகவும் இது செயல்படுகிறது. குருதியில் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டயாக்ஸைடு சமநிலை மாறினால் அல்லது மூளைக்கு தேவையான குளுக்கோஸ் குறைவாக இருந்தால் கூட கொட்டாவி ஏற்படலாம். இது சலிப்பு, ஈடுபாடின்மை போன்ற உளவியல் நிலையையும் வெளிப்படுத்தும்.
அதற்குள் மற்றவரின் கொட்டாவியைக் காணும்போது, செவியில் ஏற்படும் அழுத்த மாற்றத்தை சமனாக்கும் முயற்சியாக நாமும் கொட்டாவி விடுகிறோம். எனவே, கொட்டாவி என்பது வெறும் சோம்பல் அல்லது தூக்கம் மட்டும் அல்ல; அதற்குப் பின்னால் பல உடல் மற்றும் மனநிலை சார்ந்த காரணங்கள் உள்ளன.
உறக்கம் தேவையான நேரங்களில் அல்லது அசதி அதிகமாக இருக்கும் போது ஏற்படும் கொட்டாவி, வெப்பம் அதிகரித்துள்ள மூளையை குளிர்விக்கும் செயல்பாட்டை மேற்கொள்ளும்.
மேலும், நுரையீரலில் தேங்கி உள்ள அதிகமான கார்பன் டைஆக்சைடு கொட்டாவியின் வாயிலாக வெளியேறி, அதற்குப் பதிலாக ஆக்சிஜன் நிறைந்த புதிய காற்று நுரையீரலில் நுழைவதை இது உறுதி செய்கிறது.
கொட்டாவி பற்றிய பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதன் உண்மையான காரணம் இன்னும் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இது உயிர்வளிக் குறைவினால் ஏற்படுகிறது என்ற கருத்தும் உறுதியாக நிறுவப்படவில்லை. சிலர் இது பதற்றத்தினாலும், சில உடல் குறைபாடுகளினாலும் ஏற்படலாம் எனவும் கூறுகின்றனர்.
அடிக்கடி கொட்டாவி வருவது கல்லீரல் பாதிப்பு, வெப்பநிலை மாறுபாடு மூளை ரத்த நாள அடைப்பு போன்ற மருத்துவ காரணங்களால் ஏற்படலாம். மூளை மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் (வலிப்பு, நரம்புத் தளர்ச்சி) காரணமாகவும் கொட்டாவி அதிகமாக ஏற்படலாம். தூக்க மாத்திரைகள் போன்ற மருந்துகள் நரம்புகள் மற்றும் தசைகளில் தளர்வை உண்டாக்கி கொட்டாவிக்கு காரணமாக இருக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.