/indian-express-tamil/media/media_files/2025/06/11/Cyy04TjaIZqXOBsuaAom.jpg)
என்ன பண்ணாலும் எடை குறையலையா? இதை எல்லாம் செக் பண்ணுங்க; டாக்டர் வேணி
உடல் எடை ஏன் அதிகரிக்கிறது? காரணம் என்ன? உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்தாலும், உடற்பயிற்சி, டயட் எனும் உணவுமுறையைப் பின்பற்றினாலும் ஏன் உடல் எடை குறைவதில்லை? உடல் எடை குறையாததற்கும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன? என்று மருத்துவர் வேணி கூறிய தகவல்களைப் பற்றி பார்க்கலாம்.
மதியத் தூக்கம்: நிறைய பேர் காலையில உணவைத் தவிர்த்துவிட்டு (skip), மதியம் சாப்பிட்டுட்டு உடனே படுத்துத் தூங்கிடுவாங்க. 2 மணி நேரம் தூங்குவாங்க. இந்த மாதிரி மதியம் தூங்குறவங்களுக்கு உடல் எடை குறையறதுக்கான வாய்ப்புகள் குறையுது.
மன அழுத்தம்: எதையாவது யோசித்துகொண்டே இருப்பவர்கள், சந்தோஷமா இருக்குறதுக்கு மறந்துடுவாங்க. எதையாவது நினைச்சு கவலைப்பட்டுட்டே இருப்பாங்க. அப்போ, நம்ம உடம்புல 'கார்டிசால்' (Cortisol) என்ற ஹார்மோன் அதிகமாகும். இது உடம்புல குளுக்கோஸ் உற்பத்தியை அதிகப்படுத்திக்கிட்டே இருக்கும். இதனாலும் நமக்கு உடல் எடை குறையாது.
உடல்நலப் பிரச்னைகள்: உடம்புல ஏதாவது அழற்சி (inflammation) இருந்தாலும் வெயிட் குறையாது. உதாரணமா, ருமாட்டிக் (Rheumatic) ப்ராப்ளம் இருக்கிறவங்க சில மருந்துகள் எடுக்கும்போது வெயிட் கூடும். மைக்ரேன் (Migraine) தலைவலி உள்ளவங்க சில மாத்திரைகள் எடுக்கும்போதும் வெயிட் ஏறலாம். தைராய்டு பிரச்சனை உள்ளவங்க, அவங்களோட TSH லெவல் ಸರಿಯாக இல்லாத போதும், மாத்திரையைச் சரியாக எடுக்காத போதும் வெயிட் குறையாது.
மாதவிடாய் கோளாறுகள்: சில பெண்களுக்கு மாதவிடாய் சீராக இருக்காது. அப்படி இருந்தாலும் உடல் எடை குறையறதுக்கான வாய்ப்புகள் குறையும். அதனால், அதைச் சரிசெய்ய வேண்டும்.
தவறான உணவுப் பழக்கம்: சில பேர் பிஸ்கட், வறுக்கி, பப்ஸ், நூடுல்ஸ், கேக், ஐஸ்கிரீம்னு நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிடுவாங்க. இதுல எல்லாம் கலோரிகள் (calories) அதிகம். ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுறதுல இருக்குற கலோரியைக் கரைக்க, நீங்க 2 நாள் பட்டினி கிடக்குறதுக்குச் சமம்.
உடல் உழைப்பு இல்லாமை: எந்த வேலையுமே செய்யாம ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்கிறது, அங்க இங்க நகராமல் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறது, இவங்களுக்கு எல்லாம் உடல் எடை குறையறதுக்கான வாய்ப்புகள் குறைவு.
சரியான தூக்கம் இல்லாமை: இரவில் சரியா தூங்காம இருந்தீங்கன்னாலும் உடல் எடை குறையாது. சில பேர் லேட் நைட் தூங்கி சீக்கிரம் எந்திரிப்பாங்க. அவங்களுக்கு உடல் எடை அதிகமாகி கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு 7-லிருந்து 8 மணி நேரம் தூங்கினாதான் உடல் எடை குறையும் என்கிறார் மருத்துவர் வேணி.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.